பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

கொண்டு, விதியின்படி நடவாமல் உரிமை மீறப்படுகிற நேரத்தில், கவர்னர் உரைக்காக வகுத்துள்ள விதிமுறைகள் மீறப்படுகிற நேரத்தில், அதை உரிமைக்குழுவிற்கு அனுப்புவதிலும், அந்தக் குழு பரிந்துரை செய்வதிலும் எந்தவிதமான தவறும் இல்லை என்பதை வலியுறுத்திக் கூறிக்கொள்கிறேன்.

திரு. சங்கரய்யா அவர்கள் கீழ்வெண்மணி சம்பவத்தைப் பற்றி குறிப்பிட்டார்கள். அதை விவாதிப்பதற்கு இந்தச் சபையில் இடம் கிடையாது, எவ்வளவு பெரிய சம்பவம் என்றெல்லாம் கேட்டார்கள். அந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரையில் இடதுசாரி கம்யூனிஸ்டு கட்சி அங்கத்தினர்கள் எவ்வளவு உருக்கமாகவும் உள்ள நெகிழ்ச்சியோடும் இருக்கிறார்களோ, அதைவிட அதிகமாக தி. மு. க.-வைச் சார்ந்த எங்களுக்குச் சங்கடமும் மனவருத்தமும் உண்டு என்பதை நான் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன் கீழ்வெண்மணியில்கூட பஞ்சாயத்துத் தேர்தலில் தி. மு. க.-வைச் சேர்ந்தவர்தான் வெற்றி பெற்றிருக்கிறார்.

அங்கத்தினர் அவர்கள் இந்தச் சம்பவத்தைப்பற்றிப் பேசுவதற்குத் தங்களுடைய உணர்வுகளைக் காட்டிக்கொள்ள இடமே தரப்படவில்லையா என்றால், தரப்பட்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி உறுப்பினர் திரு. ஜெயராஜ் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் தரப்பில் தரப்பில் இந்த இந்த அரசின்மீது கீழ்வெண்மணி சம்பவத்திற்காக ஒரு கண்டனத் தீர்மானத்தைக் கொண்டுவந்து, அதன் பேரில் இங்கே நீண்ட நேரம் விவாதம் நடந்திருக்கிறது. அந்த விவாதத்தில் பங்கு எடுத்துக்கொண்டு திரு. சங்கரய்யா அவர்கள் குறிப்பிட்டது நடவடிக்கை குறிப்பில் இருக்கிறது. அது இப்பொழுது எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது.

"இங்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொண்டுவரப்பட் டிருக்கிற தீர்மானம் அரசியல் முதல் பெறுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களைச் சார்ந்த ஒரு காங்கிரஸ் உறுப்பினர் மூலமாகக் கொண்டுவரப்பட்டபோதிலும், உண்மை யிலே இது நிலப்பிரபுக்களின் சார்பிலே கொண்டுவரப்பட்ட தீர்மானம் என்ற காரணத்தினால், இன்று நிலப்பிரபுக்களுக்கு எதிராக உள்ள இலட்சக்கணக்கான ஏழை எளிய உழைப்பாளி மக்களின் பெயரால் இந்தக் கண்டனத் தீர்மானத்தை நாங்கள் எதிர்க்கிறோம்"