பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

பங்கிட்டுக்கொடுத்தோம் என்று இங்கே பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சொன்னார்கள். ஆளும் காங்கிரஸ் பத்திரிகையில் வந்திருக்கும் செய்தியே "பல இடங்களிலும் அரிசிக் கடைகள் சூறை, கிளர்ச்சி முற்றுகிறது, நகரில் பலர் கைது” என்கிற அளவுக்குத்தான் அந்தப் பத்திரிகையில் செய்தி வந்தது

அதைப்போலவே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரபூர்வமான பத்திரிகையில் இதைப்போன்ற செய்தி வந்தது. திருவொற்றியூரில் "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, உழைக்கும் மக்கள் மாமன்றம் ஆகிய ஆகிய கட்சிகள் கட்சிகள் இணைந்து வழி காட்டுகின்றன. கையாலாகாத கருணாநிதியை எதிர்த்து மக்களே அரிசி விலையைக் குறைத்தார்கள். தமிழகம் எங்கும் இயக்கம் சூடு பிடிக்கிறது" என்று செய்தி வந்தது. இப்படிப்பட்ட பிரச்சினைகளில் அரசு தவறான

சில

முடிவுகளை எடுத்துவிட்டது, குறைபாடான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்றால், அவைகளை மக்கள் மன்றத்தில் எடுத்து சுட்டிக்காட்டும் முழு பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு உண்டு. முழு உரிமை எதிர்க் கட்சிகளுக்கு உண்டு. அந்த ஜனநாயகத் தத்துவத்தின் குறுக்கே நான் நிற்க விரும்பவில்லை. அதை எதிர்த்து கிளர்ச்சிகள் நடத்துகிற அளவுக்கு எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு. ஆகவே, நான் அவைகளில் எந்தவிதமான குறைபாடும் சொல்ல விரும்பவில்லை.

ஆனால் இதுவரையிலே சமுதாயத்தில் கடைகளில் புகுந்து கொள்ளை அடித்தல், லாரிகளை வழி மறித்தல் என்ற இந்தக் காரியங்கள் வேறு மாநிலங்களில் நடைபெற்றபொழுது எந்த அளவுக்கு அந்த அரசுகள் நடந்து கொண்டிருக்கின்றன? இங்கே உணவுப் பிரச்சினை தமிழகத்தில் இரண்டொரு நாள் மிக முக்கியமான உச்ச கட்டத்தை அடைந்த நேரத்தில்தான் பங்களூரில், சிக்மகலூர் என்ற இடத்தில் ஒரு உணவுக் கடையிலே புகுந்து சூறையாட எண்ணிய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்து, இந்திரா காங்கிரஸ் ஆளும், காங்கிரஸ் ஆளுகின்ற மைசூரில் இரண்டு பேர்கள் கொல்லப் பட்டார்கள் என்கின்ற செய்தி வந்திருக்கிறது.