பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

253

இதன் தொடர்பாக பல மாவட்டங்களில், மாநிலம் முழுமையும் பல கிளர்ச்சிகள் நடைபெற்றன. அந்தக் கிளர்ச்சி களையெல்லாம் போலீஸார் மிகுந்த பொறுப்பு உ உணர்ச்சியோடு, கடமை உணர்ச்சியோடு இன்றைக்கு அடக்கியிருக்கிறார்கள். மேலும் இப்படிப்பட்ட நிலைமைகள் வராமல் - நான் அரசியல் கட்சிகள் மாத்திரம் இதைச் செய்கின்றன என்று சொல்லவில்லை. சில பேர் இதைச் செய்ய துணிந்தார்கள். இந்த மாமன்றத்தில் எடுத்துச் சொல்லப்பட்டது போல வர்த்தக சூதாடிகளானாலும் சரி, பதுக்கல் பேர்வழிகளானாலும் சரி அல்லது விவசாயிகள் சில பேர் அதைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்க வேண்டும் என்று கருதுகிறவர்களானாலும் சரி, யார் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்ற அந்த மும்முரமான, நம்முடைய தீவிரமான அந்தப் பணிகளின் காரணமாக தடுக்கப் பட்டிருக்கிறது

நான் இங்கே ஒரே ஒரு பட்டியலை மாத்திரம் இந்த மன்றத்தின் முன்னால் வைக்கவேண்டும் என்று கருதுகிறேன். அந்தப் பட்டியலை உணவு அமைச்சர் அவர்கள் தயாரித்துக் கொடுத்திருக்கிறார். மேஜையின் மீது வைக்கப்பட்டிருக்கிற அந்தப் பட்டியலில் மொத்தம் எத்தனை பேர்கள் பதுக்கல் வியாபாரிகள் பிடிக்கப்பட்டார்கள் என்கின்ற கணக்கும், எத்தனை வழக்குகள் என்ற கணக்கும் தரப்பட்டிருக்கிறது

ஜனவரியில் 42, பிப்ரவரியில் 38, மார்ச்சில் 66, ஏப்ரலில் 82, மேயில் 132, ஜூனில் 150, ஜூலையில் 155 ஆக வழக்குகளின் எண்ணிக்கை 665 என்று தரப்பட்டிருக்கிறது.

நாம் 2-8-1974-ல் இந்த நிலைமை கொஞ்சம் உச்ச கட்டத்திற்கு வந்த நேரத்தில், 2-8-1974-ல் விவசாயிகளுடைய முனையை எப்பொழுதும் சர்வ ஜாக்கிரதையாக நாம் அணுகிட வேண்டும், நாம் அதிகாரிகளைக் கொண்டு பதுக்கலைக் கண்டு பிடியுங்கள் என்று சொல்கிற நேரத்தில் சில அதிகாரிகள் விவசாயிகளிடம் கொஞ்சம் அதிக்கிரமமாக நடந்துகொள்கிற காரணத்தினால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைகிறார்கள் என்பதினாலும், அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்த காலத்தில் கூட அப்பொழுது ரேஷன்

மன