கலைஞரின் சட்டமன்ற உரைகள்
259
சொன்னாரோ அல்லது இவரைப் பார்த்து அவர் சொன்னாரோ (சிரிப்பு) அதற்குப் பிறகு பிரதமரும், சபாநாயகரும், திரு மொரார்ஜி தேசாயும், மற்றக் கட்சித் தலைவர்களும் 5, 6 முறை கூடிப் பேசி, பத்திரிகைகளில் 7, 8 நாட்களாக அந்தச் செய்திகள் பரபரப்போடு வந்து, கூடிப் பேசிய புகைப்படங்கள் எல்லாம் ஏடுகளில் வந்து, அதன் பின்னால் அந்த அறிக்கையைப் பார்க்கலாம், ஆனால் அதனை வெளியிலே சொல்லக்கூடாது என்ற பிரமாணம் எடுத்துக்கொண்டு பார்க்கலாம் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது, அதற்குப் பிறகும் அதைக் குறிப்பு எடுக்கக் கூடாது என்று சுட்டிக் காட்டப்பட்டு, ஒருவாறாக பல நாட்களுக்குப் பிறகு இப்போது அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் இருக்கிற எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள் என்ற செய்தி இன்று காலையிலே அரும்பியிருக்கிறது, ஆனால், அவ்வளவு சங்கடங்கள் எதுவும் இல்லாமல் இங்கு அரை மணி நேரம் அதுபற்றிய சர்ச்சை எழுந்து, உடனடியாக அதுபற்றி ஃபைலை பார்க்கலாம் என்று அரசின் சார்பிலே ஒப்புக்கொள்ளப் பட்டு, தலைவர் அவர்களுடைய அறையில் அந்தக் கோப்புப் பார்க்கப்பட்டிருக்கிறது.
இங்கு நம்முடைய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் களும் இங்கே ஃபைலைப் பார்க்கக் காட்டிய இதே ஆர்வம், பலமான சர்ச்சை, பிரசித்திப் பெற்ற பாண்டிச்சேரி லைசென்ஸ் ஊழல் பற்றிய சி. பி. ஐ. தயாரித்த அறிக்கையைப் பார்ப்பதற்கு, டில்லியில் அவர்கள் காட்டினார்களா என்றால் பத்திரிகையில் அப்படிச் செய்திகள் ஒன்றும் வரவில்லை. அதை வலியுறுத்தி, அதைக் காட்டித்தான் தீரவேண்டுமென்று அங்குள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்படிப்பட்ட போராட்டங்களை அங்கே நடத்தியதாகவும் பத்திரிகைகளில் செய்தி கிடையாது.
திரு. கே.டி.கே. தங்கமணி : எதிர்க்கட்சியைப்பற்றிக் குறிப்பிடுகிறபோது கம்யூனிஸ்டுக் கட்சியைப்பற்றியும் குறிப்பிட் டார்கள். பூபேஷ் குப்தா அவர்கள் சி.பி.ஐ. அறிக்கை வைக்கப் படவேண்டுமென்று வற்புறுத்தியிருக்கிறார். அந்த அறிக்கையைப் பரிசீலிப்பதற்குச் சென்றபோதும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் களும் சென்றிருக்கிறார்கள். குறிப்பு எழுதக்கூடாது என்று