பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

261

எங்கள் மீது நம்பிக்கையில்லை என்பதை தெரிவிக்கக்கூட இரண்டு நாட்கள் அவர்களுக்கே தயக்கம் ஏற்பட்டது. முதல் நாள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுவதற்குப் பதிலாக ஒத்திவைப்புத் தீர்மானத்தில் அழுத்தந்திருத்தமாக இருந்து, மறுநாளும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வருவதற் கிடையில் இப்படிப்பட்ட பிரச்சினைகள் எழுந்து இப்படி தயங்கிக் கொண்டே வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசிய சில கட்சித் தலைவர்கள் என்ன கருத்துக்களை மிக முக்கியமாகச் சொன்னார்கள் என்றால் ஆளுங் காங்கிரசைச் சேர்ந்த திரு. மாரிமுத்து அவர்கள், தமிழ்நாடு கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர் பெரியவர் மணலி அவர்களும், திரு. கோவைச் செழியன் அவர்களும், முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் பேசிய நண்பர் லத்தீப் ஆகியோரும் பேசுகின்ற நேரத்தில் இந்தக் கட்சியில் இன்றைக்கு அடிமட்டத்தில் இருக்கிற கட்சிக்காரர்கள், நாடாளுமன்ற சட்டப் பேரவை உறுப்பினர்கள், பொறுப்பில் இருப்பவர்கள் அத்தனைபேரும் தங்களைத் தாங்களே திருத்திக் கொள்ளவேண்டும். தங்களைத் திருத்திக்கொண்டு இந்த அரசோடு ஒத்துழைக்க வேண்டும் என்ற கருத்தை - ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் இருந்து சொன்னார்கள். அதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் திரு. மாரிமுத்து உட்பட அத்தனை பேருக்கும் இந்த கட்சி அடிமட்டத்தில் இருக்கிற தொண்டர்கள் பொறுப்பில் இருப்பவர்கள் அனைவரும் திருத்திக் கொள்ள வேண்டும் என்கிற உணர்வு அவர்களுக்கு உள்ளூர இருப்பதாக உணர்கிறேன்.

திரு. ஏ.ஆர். மாரிமுத்து : ஆட்சியிலிருக்கிறபோது தவறு நடக்காமல் இருக்க வேண்டுமென்று சொன்னேனே தவிர, இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமென்று சொல்லவில்லை.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : திரு. மாரிமுத்து அவர்கள், இந்த அவையில் யாரும் தெரிவிக்காத பாராட்டைத் தெரிவித்திருக்கிறார்கள். இந்தக் கட்சி கட்டுப்பாடு நிறைந்தது; கட்டுக்கோப்பாக இருக்கிற கட்சி, இதற்கு அடிமட்டம் வரை கிளைக் கழகங்கள் இருக்கின்றன முறையாக தேர்தல்கள்