பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

கவர்னர் அவர்கள் உரையாற்றுகின்ற நேரத்தில் வெளிநடப்புச் செய்வது என்பது கவர்னர் அவர்களுக்கு நாம் தரவேண்டிய மரியாதை, நாம் அளிக்கவேண்டிய மதிப்பு இவைகளை அளிக்கத் தவறியதாகும் என்பதுமட்டுமல்ல, கவர்னர் உரைக்காக நாம் வகுத்திருக்கிற விதிகளை மீறுவதாகும் என்ற அளவில், அவர்கள் குறிப்பிட்டமாதிரி அவர்கள் தந்திருக்கிற திருத்தத்தை நான் நிச்சயம் ஏற்றுக்கொள்வதற்கில்லை என்று கூறி, அமர்கிறேன்.