பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமைக் காலத்திலேயிருந்தே திருவாரூரில் அவரை எதிர்த்து வருபவர்களில் ஒருவன். திருவாரூரில் நகரமன்ற சேர்மனாக அவர் வந்துவிடக் கூடாது என்பதற்காக, அவர் சார்பில் 20 பேர் கவுன்சிலர்களுக்கு நிறுத்தப்பட்ட நேரத்தில், இவர்களெல்லாம் ஜெயித்தாலும் பரவாயில்லை, ஆனால் அவர் சேர்மனாக வந்து விடக்கூடாது என்று, நான் மாணவனாக இருந்த அந்தக் காலத்திலேயே எதிர்த்திருக்கிறேன். அவர் போட்டியிட்ட வார்டுகளிலே அவர் இரண்டு வார்டுகளிலே போட்டியிட்டார் வேலை செய்து ஒரு வார்டிலே 5 வோட்டுகளில் இராமானுஜ முதலியார் என்பவரிடம் அவர் தோற்றார். இன்னொரு வார்டிலே 12 ஓட்டுகள் வித்தியாசத்தில் துரைராஜ் என்ற கிறித்தவரிடம் தோற்றார். அவர் நிறுத்தியவர்கள் ஜெயித்தார்களே தவிர, இவர் தலைவராக வர முடியவில்லை. அப்பொழுது சென்னைக்கு வந்தவர்தான் திருவாரூரை விட்டு இந்த தியாகராச முதலியார்.

திரு. கே.டி.கே. தங்கமணி : அன்றைக்கு அப்படி யெல்லாம் எதிர்த்துவிட்டு இன்றைக்கு அவருக்கு ஆதரவாக இருக்கிறீர்களே என்பதைத்தான் நாங்கள் கேட்கிறோம்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : இல்லை, நாங்கள் என்ன மன்றாடியாருக்கா உங்களைப்போல துணை போனோம். விவசாயப் போராட்டத்தில் நீங்கள் போனதைப் போல? (கை தட்டல்)

திரு. கே.டி.கே. தங்கமணி : தியாகராஜ முதலியார் போராட்டம் நடத்தி ஜெயிலுக்குப் போனால் நாங்களும் அவரோடு போகவும் தயாராக இருக்கிறோம். மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : அந்தத் தொடர்பு கூட எங்களுக்கு இல்லை. எந்த ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உடனடியாக, கம்யூனிஸ்ட் கட்சியையே எடுத்துக் கொண்டாலும் கேரளத்திலே எல்லாத் தொழில்களையும் அழித்து விட்டார்களா? தொழிலதிபர்கள் இனிமேல் இருக்கக்கூடாது என்று, எல்லாத் தொழில்களையும் அழித்துவிட்டார்களா என்றால் இல்லை. இன்றைக்கு இந்தியாவில் சோஷலிசம் பேசிக் கொண்டிருக்கின்ற நம்முடைய நாட்டில் இந்திரா காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும் இருக்கின்றன, இந்திரா காங்கிரசின்