278
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
வாண்டையாராக இருந்தாலும், மன்றாடியாராக இருந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகம் சாமானியர்களுக்குத் துணை போகுமே தவிர, சீமான்களுக்கு நிச்சயமாகத் துணை போகாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர் சீனிவாசன் அவர்கள் கூடப் பேசினார்கள், மாதவன் சுப்பராஜா வீட்டிற்கு போகிறார் என்று. என்ன செய்வது? எதற்காக முதன்முதலாகப் போனார் என்றால் சீனிவாசனுக்குப் பெண் கேட்பதற்காகத்தான் போனார். சீனிவாசன் தான் 'சுப்பராஜா வீட்டில் பெண் இருக்கிறது, பேசச் சொல்லுங்கள், மாதவனை அனுப்புங்கள்' என்று சொன்னார்.
திரு. பெ. சீனிவாசன் : முதலமைச்சரவர்கள் சீட்டு விளையாடிக் கூடப் பார்த்திருக்கிறேன், அவர்கள் பாயிண்ட் வீக்காகும்பொழுது துருப்புச் சீட்டைப் பயன்படுத்துவார்கள். இது துருப்புச் சீட்டு இல்லை. எனக்காக மாதவன் போனது இல்லை, யாரும் போனது இல்லை. தொலைபேசியில்தான் பேசினார்கள். இது ஒன்றும் பெரிய விவகாரம் இல்லை. அதனால் எந்தவிதமான பாதகமோ சாதகமோ எனக்கு இல்லை. இன்றைக்கு முன்னாள் மாவட்டச் செயலாளர் தென்னரசு அவர்கள் ஜெயவிலாசைச் சேர்ந்தவரின் காரை தன்னுடைய உபயோகத்தில் வைத்திருக் கிறார்கள். அம்பாசிடர் காரை இரண்டு மூன்று ஆண்டு காலமாக வைத்திருக்கிறார்கள்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : அவர் மாதவன் போனார் என்பதை மட்டும்தான் மறுக்கிறார். நான் பேசியதை மறுக்கவில்லை. ஆக, பெண் கேட்டது உண்மை. அவர்கள் பெண் தரமாட்டேன் என்று சொல்லி விட்டார்கள். ஏனென்றால் சீனிவாசன் ரொம்ப சோஷலிசம் பேசுகிறவர், எங்கள் பெண்ணைக் கொடுத்தால் ஒழுங்காக வாழ முடியாது, அப்படிப்பட்ட சமதர்ம வாதிக்கு எங்கள் பெண்ணை கொடுக்க முடியாது என்று பாராட்டித்தான் அந்தச் சீமான் சொன்னார்கள். (சிரிப்பு).
திரு. பெ. சீனிவாசன் : ஆளுங்கட்சி நண்பர்கள் ரொம்ப ஆச்சரியமாக கை தட்டி மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள். முதலமைச்ச ரவர்கள் சொல்லும்பொழுது அதனுடைய சம்பவத்தைச் சொல்லி யிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். என்னைப்பற்றி