பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

27

உரை : 55

அவை செத்து விட்டதா?

நாள் : 06.02.1973

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் திரு.வீராசாமி அவர்கள், திரு.எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் “இந்த அவை செத்து விட்டது” என்று பத்திரிகைகளுக்கு அளித்த அறிக்கையை ஒட்டி உரிமைப் பிரச்சினை ஒன்றினை இங்கே கொண்டு வந்து, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்கள், மாண்புமிகு உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துக்களை இதிலே எடுத்துக் கூறியிருக்கிறார்கள். நம்முடைய டாக்டர் ஹாண்டே அவர்கள் “இந்தத் தீர்மானத்தை முழுமையாக எதிர்க்கின்றேன் என்று குறிப்பிட்டார்கள். திரு.கே.டி.கே தங்கமணி அவர்கள், அவர் அவருக்குத் தெரிந்த வார்த்தையை பயன்படுத்திவிட்டார் என்று குறிப்பிட்டு, அவருக்கு இப்படித்தான் சொல்லத் தெரியும் என்ற நிலையை இங்கே புலப்படுத்தியிருக்கிறார்கள். அதிலே உரிமைப் பிரச்சினை இருக்கிறதா, இல்லையா என்கின்ற ஆராய்ச்சியில் நம்முடைய பொன்னப்ப நாடார் அவர்கள் சொல்லாவிட்டாலும், "மறப்போம் மன்னிப்போம்” என்று அவர்கள் கூறியதிலிருந்து, மன்னிப்பது என்பது குற்றம் செய்தவர்களைத் தான் மன்னிக்க முடியும். ஆகவே "மன்னிப்போம்" என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்கள். குற்றம் செய்தார். எனவேதான் மன்னிப்போம் என்று அவர்கள் கூறியதிலிருந்து, உரிமைப் பிரச்சினை இருக்கிறது என்பதை அவர்கள் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த அவை செத்துவிட்டதா, இல்லையா என்பதை நாடு நன்றாக உணர்ந்திருக்கிறது. டாக்டர் ஹாண்டேகூட அழகாகச் சொன்னார்கள். செத்து இருந்தால், எப்படிச் சண்டை போட முடியும் என்று அவர்கள் கேட்டார்கள். திரு.எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களுக்கு டாக்டர் ஹாண்டே அவர்களே சரியான மறுப்பை