கலைஞரின் சட்டமன்ற உரைகள்
279
வந்ததால் நான் சொல்ல விரும்புகிறேன். நானே ரொம்பக் கூச்சப்படுகிறேன் என்பதோடு இன்னும் சொல்லப்போனால் நேரடியாக முதலமைச்சரவர்கள் என்னை பலதடவை வற்புறுத்தினார்கள், “திருமணம் செய்து கொள், ஏன் திருமணம் செய்யவில்லை” என்று வற்புறுத்தினார்கள். துலுக்கப்பட்டியில் தொழிலாளர் போராட்டம் நடந்தபொழுது என்னைச் சந்திக்க வந்தார்கள். நான் அப்பொழுது கைது செய்யப்பட்டிருந்தேன். அது யாரால் என்பது முதலமைச்சரவர்களுக்குத் தெரியும். நான் அதற்காகப் பெருமைப்படுகிறேன். பெண் எடுக்கவில்லை என்பதற்காக வருத்தப்படவில்லை. நான் இன்னும் பச்சையாகச் சொல்கிறேன், நாங்கள் தொழில் ஸ்தாபனம் வைத்திருப்பவர்கள், சீனிவாசன் தொழிலாளர் பக்கமே சென்று கொண்டிருந்தால் எல்லாம் கெட்டுவிடும் என்று அவர்கள் சொன்னதாகக் கூட அறிகிறேன், அதற்காக நான் வருத்தப்படவில்லை, அதற்காகக் கவலைப்படவும் இல்லை.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : நான் : சொன்னதைத்தான் நண்பர் சீனிவாசன் அவர்களும் திரும்பச் சொன்னார்கள். ஆகவே, இந்த அரசைப் பொறுத்தவரையில் ஏழைகளுக்கு எதுவும் செய்யவில்லை என்று கூற முடியுமா? குடிசை மாற்று வாரியம் செய்யும் திட்டங்களைப் பார்த்துவிட்ட பிறகும், குடிநீர் வாரியம் கிராமப்புறத்திலிருக்கின்ற ஏழை மக்களுக்காகத்தான் என்பதை உணர்ந்தபிறகும், அரிசன நல வீட்டு வசதி வாரியம் உருவாகி அதனால் தாழ்த்தப்பட்ட ஏழை மக்கள் பயனடைகிறார்கள் என்பதை அறிந்த பிறகும், கண்ணொளி வழங்கும் திட்டத்தினால் கனதனவான்கள் அல்ல, கதியற்ற ஏழை எளியவர்களுக்கு என்பதை அறிந்த பிறகும், பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டத்தினால் பயன் பெறுகின்றவர்கள் ஏழைகள்தான் என்பதை அறிந்த பிறகும், ஊனமுற்றோருக்கான திட்டத்தினால் பயன் அடைகின்றவர்கள் ஏழை எளியவர்கள் தான் என்பதைத் தெரிந்து கொண்ட பிறகும், கைரிக்ஷாக்கள் ஒழிப்புத் திட்டத்தினால் பயன் அடைந்தவர்கள் ஏழைத் தொழிலாளர்கள்தான் என்பதைத் தெரிந்த பிறகும், அரசாங்க ஊழியர்களுக்கான குடும்பப் பாதுகாப்புத் திட்டம் ஏழை எளிய அரசு அலுவலர்களுக்குத்தான் என்பதைத் தெரிந்த பிறகும், இது