கலைஞரின் சட்டமன்ற உரைகள்
287
உற்பத்தியாளர்கள் தங்கள் இருப்பை அறிவிப்பதற்குள்ள வரம்பு 40 குவிண்டால் நெல்லில் இருந்து 20 குவிண்டால் என்றும், 25 குவிண்டால் அரிசியிலிருந்து 13 குவிண்டால் என்றும் குறைத்து நிர்ணயம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு நெல், அரிசி (இருப்புக்களை அறிவித்தல்) ஆணையின்படி உற்பத்தி யாளர்கள், மற்றும் வியாபாரிகள் தேவைக்கு மேல் பதுக்கி வைத்திருக்கும் இருப்பை அரசு கட்டாயமாக எடுத்துக்கொள்ளும். 'லெவிக்கு
அவ்விதம் எடுக்கும்போது அரசு நிர்ணயித்துள்ள கொள்முதல் விலைதான் அளிக்க முடியும்.
உற்பத்தியாளர்கள் தங்கள் இருப்புகளைப் பதுக்குவதாகத் தெரிந்தால், அரசு இந்த விதியின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
'லெவி' முறையிலும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகவும் கிடைக்கின்ற இருப்பை பற்றாக்குறைப் பகுதிகளில் உள்ள பொது மக்களுக்குச் சமமாகப் பங்கீடு செய்வதை உறுதிப்படுத்துவதற் காகத்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
வரும் ஆண்டில் பெரும் பற்றாக்குறை எதிர்பார்ப்பதால் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு நியாயமான விலையில் உணவுப் பொருள் கிடைக்கச் செய்வதற்காகவும், பற்றாக் குறையைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த முறை கையாளப் படுகிறது.
இந்த நெருக்கடியான நேரத்தில் இந்தக் கொள்கைகளை அமல் செய்வதற்கு எல்லோருடைய ஆதரவும் எதிர்பார்க்கப் படுகிறது. இந்த அறிவிப்புகளைத் தமிழ் நாட்டிலுள்ள விவசாயப் பெருங்குடி மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஏனென்றால் அவர்கள் எல்லாம் இந்த மன்றத்தில் எழுப்பப்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளைப்பற்றி அறிந்தவர்கள்தான். அவர்கள் நம்மோடு ஒத்துழைக்க வேண்டும். வியாபாரிகளுடைய கொள்ளை லாப வேட்டைக்காட்டில் பலியாகிவிடாமல் அரசாங்கத்தோடு ஒத்துழைத்து - எண்ணிக்கையில் நிலக்கிழார்கள் குறைவு என்று கூற முடியாது வாங்கிப் புசிக்கின்ற பொதுமக்கள் அதிகம் என்ற அந்த நிலையை உணர்ந்து ஓரளவு தியாகம் செய்கிற அந்த சித்தத்தோடு இந்தப் பணியில் இந்த அரசோடு
—