பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

அவர்கள் எல்லாம் ஒத்துழைக்க வேண்டும் என்று நான் மிகுந்த பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன். அவர்களுக்கு என்று கூட்டுறவு முறையில் வாங்குகிற நெல்லுக்கு நாம் நிர்ணயித் திருக்கிற விலை குறைவானதல்ல, அது ஓரளவிற்கு அவர்களுக்குத் திருப்தி அளிக்கக்கூடிய விலைதான் என்பதை மாண்புமிகு உறுப்பினர்கள் நன்றாக அறிவார்கள்.

இங்கு பேசப்பட்டுள்ள பலதரப்பட்ட கருத்துக்களையும் திரு. மாரிமுத்து அவர்களும் மற்ற நண்பர்களும் இங்கே எடுத்துச் சான்ன கருத்துக்களையெல்லாம் மனதில் வைத்துத்தான், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்கூட திரு. அழகர்சாமி அவர்கள் சொன்னார்கள். அந்த விலைகளை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் ரொம்பவும் அதிகமாகிவிட்டால் வாங்கிப் புசிக்கின்ற மக்களுக்குக் கஷ்டம் ஏற்படும். குறைந்துவிட்டால் உற்பத்தியாளர்களுக்கு கஷ்டம் ஏற்படும். அவர்களுக்குச் சாகுபடிச் செலவிற்கே கட்டுப்படியாகாமல் போய்விடும், இவைகளை எல்லாம் நடுநிலையில் யோசித்துத்தான் இந்த விலைகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. இதிலும் கள்ளச் சந்தையில், இதிலும் கருப்புச் சந்தையில் வாங்குவதற்கு, விற்க யாராவது வந்தால் தயவுதாட்சண்யம் இல்லாமல் அரசு தக்க நடவடிக்கைகள் எடுக்கும் என்பதை மீண்டும் மீண்டும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அதற்கு எந்தவிதமான நிலையையும் உருவாக்கி விடாத அளவிற்கு விவசாயப் பெருங்குடி மக்கள் இந்த அரசோடு ஒத்துழைப்பார்கள் என்று நான் திடமாக நம்புகிறேன். அதோடு தொடர்பான, நம்மைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிற வறட்சியை எதிர்த்துப் போராட மாண்புமிகு..

திரு. எஸ். வடிவேல் : நமது மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்கள் கூறுகிற அந்த நல்ல ஆலோசனைகளை எல்லாம் நிறைவேற்றுவதற்கு சர்வ கட்சிக் குழு ஒன்று அமைக்கப்படுமா? அதுதான் நடைமுறையில் சாத்தியப்படும் இல்லை என்றால் இந்தக் காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்ற முடியாத ஒரு நிலை ஏற்படும் என்பதை நான் அறிவிக்க விரும்புகிறேன்.

டாக்டர் எச். வி. ஹாண்டே : இன்னொரு விளக்கத்தைக் கூட முதல் அமைச்சர் அவர்களிடமிருந்து நான் எதிர்பார்க்கிறேன்.