பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

289

நேற்று மேலவையில் நம் மதிப்பிற்குரிய அமைச்சர் அவர்கள்

'The area under Kuruvai in Thanjavur district this year had come down to less than four lakh acres from five lakh acres last year'. என்று, கிட்டத்தட்ட 31/2 லட்சம் டன்தான் வந்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். சென்ற ஆண்டு ஐந்து லட்சம் டன். இந்த ஆண்டு அதைவிடக் குறைவாக வந்திருக்கிறது. ஆகவே அதற்கு ஒரு விளக்கம்,

'The yield was only five lakh tonnes as against 15 lakh tonnes last year.'

ஒரு லட்சம் ஏக்கர் சாகுபடி குறைந்தால் கிட்டத்தட்ட பத்து லட்சம் டன் குறைந்திருக்கிறது என்று அமைச்சர் அவர்கள் அங்கே கூறியதாகத் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், 20 லட்சம் டன் பற்றாக்குறை அங்கு ஏற்படுகிறது என்றும் சொல்லியிருக் கிறார்கள்.. அந்த அவையில் சொல்லியிருக்கிறார்கள். நம்முடைய அவையில் கூறவேண்டும். அதன் நிலைமை என்ன? எப்படி ஒரு லட்சம் ஏக்கர் சாகுபடி குறைந்தால் பத்து லட்சம் டன் விளைவு குறையும்? உண்மை நிலை என்ன? மாவட்ட ரீதியாகச் சரியான தகவல்களைச் சேகரித்திருக்கிறீர்களா?

Has proper estimate been made about the deficit in the whole State?

என்ற விளக்கத்தை நான் முக்கியமாகக் கேட்க விரும்புகிறேன். எல்லாப் பிரச்சினைகளையும் கிளப்பியிருக்கிறோம் இந்த மன்றத்தில். அந்த விவரங்களை எல்லாம் இந்த மன்றத்தில் உணவு அமைச்சர் அவர்கள் சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

மாண்புமிகு திரு. மன்னை மன்னை ப. நாராயணசாமி தலைவர் அவர்களே, 3.74 லட்சம் இன்றையதினம் குறைவாகச் சாகுபடி செய்திருக்கிறார்கள். நாம் எதிர்பார்த்துத் திட்டமிட்டது ஒரு ஏக்கருக்கு 27 மூட்டைகள் என்ற அளவில் முதலில் எதிர்பார்த்தோம். அது காலம் தாழ்ந்து நடவான காரணத்தால் 18 மூட்டைகள்தான் எதிர்பார்க்கிறோம். முதலில் ஐந்து லட்சம் ஏக்கர்களில் நடவு செய்ததால் 3,68,000 டன் எதிர்பார்த்துக்