290
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
கொண்டிருந்தோம். ஆனால் விளைவு குறைந்து விட்டது. பரப்பளவும் குறைந்துவிட்ட காரணத்தால் இப்போது 2.45 லட்சம் டன்தான் அதில் காணும் என்ற நிலையில் இருக்கிறோம். நேற்று திரு. மாரிமுத்து அவர்கள் சொன்னார்கள். சர்க்கார் கொடுக்கிற கணக்கில்கூட தப்பு இருக்கிறது. 21/2 லட்சம் ஏக்கர்தான் குறுவை சாகுபடியாகியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஐ.ஆர். 20 தவிர மற்றவை பற்றிச் சொன்னார்கள். ஐ.ஆர். 20-யையும் சேர்த்து 3.47 லட்சம் டன் என்று கணக்குப் போட்டுச் சொன்னார்கள்.
டாக்டர் எச். வி. ஹாண்டே : தஞ்சாவூரில் பத்து லட்சம் டன் குறைகிறது. . .
மாண்புமிகு பேரவைத் தலைவர் : ஈல்ட் குறைந்து போய் விட்டது என்று சொல்லியிருக்கிறார்கள்.
திரு. ஏ.ஆர். மாரிமுத்து : முதல் அமைச்சர் அவர்கள் அறிவித்த அறிவிப்புப்பற்றி ஒரு க்ளாரிபிகேஷன் கேட்கிறேன். உபரி மாவட்டங்கள், உபரியாக விளையக் கூடிய பகுதிகளில் அரசாங்க சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன், உபரி நெல்லை கூட்டுறவுச் சங்கங்கள் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது என்று இப்போதுள்ள அறிவிப்பில் அறிவிக்கப் பட்டது. தஞ்சை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் விவசாயம் செய்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் அங்கு வாங்கிச் சாப்பிடக்கூடிய மக்களுக்கு விநியோகிப்பதற்காக என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன? கூட்டுறவுச் சங்கங்கள் கொள்முதல் செய்து அதிக விலை கொடுத்து வாங்குகின்றன. சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் லெவி குறைந்த விலையில் வாங்குகிறது. குறைந்த விலையில் வாங்குகிறதைப் பூராவும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி அதிக விலையில் வாங்குவதை அங்கு கொடுக்கிறீர்களா? அங்கு சாதாரண மக்கள் வாங்கிச் சாப்பிட என்ன ஏற்பாடுகளைச் செய்திருக்கிறீர்கள்?
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : பொருளாதார ரீதியில் இப்போது ஒரு வருமானத்தை வரையறுத்துக் குறிப்பிட்டு அப்படிப்பட்டவர்களுக்கு பற்றாக்குறைப் பிரதேசங்களில் வழங்குவதற்கு இது பயன்படுத்தப்படும்.