கலைஞரின் சட்டமன்ற உரைகள்
291
திருமதி த.ந. அனந்தநாயகி : நகர்ப்புறத்தில் சாதாரணமாக ஒரு பாக்டரி லேகூட மாதம் ரூ. 500 சம்பாதித்துக் கொள்கிறார். அர்பன் ஏரியாவில் ரூ. 500, ரூ. 750, ரூ. 1,000 என்று உயர்த்துவதற்கு ஒரு தனிச் சட்டம் போடுவீர்களா?
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : அவைகளை
எல்லாம் போகப் போகக் கவனிக்கலாம்.
அடுத்தபடியாக, நான் மிக முக்கியமான பிரச்சினையான வறட்சிப் பகுதிகளுக்கு, பாதிக்கப்பட்டிருக்கிற விவசாயிகளுக்காக சில சலுகைகளை அளிக்க விரும்புகிறேன். ஏனென்றால் விவசாயிகள் நம்மோடு ஒத்துழைக்க வேண்டுமென்று சொல்கிற நேரத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நாம் பக்கத் துணையாக இருக்க வேண்டும் என்ற அந்த அடிப்படையில் சில சலுகைகளை இங்கே நான் அறிவிக்க விரும்புகிறேன். (1) வறட்சிப் பகுதிகளில் அரசு கடன்களை வசூலிப்பதை உடனடியாக தள்ளி வைக்கும் (கைதட்டல்) (2) வறட்சிப் பகுதிகளில் இந்த ஆண்டு நிலவரி வசூலிக்கப்படமாட்டாது. (3) கூட்டுறவு மூலமான கடன்கள் பெற்றவர்களுக்கு வசூல்கள் செய்யப்படுவது தள்ளி வைக்கப்படும். (4) வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மேலும் நிவாரணம் அளிக்கும் பொருட்டு மேலும் பல தீவிரமான நடவடிக்கைகளை யோசித்து வருகிறது, அவை அவ்வப்போது அறிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
முதல் கட்டமாக நம் மாநில அரசின் சார்பாக ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று சொன்னேன். இரண்டு கோடி ரூபாய் திட்டங்கள் வகுக்கப்பட்டு செலவழிக்க இன்றைக்கு அலுவலர்கள் எல்லாம் தொடங்கி விட்டார்கள். இந்த இரண்டு கோடி ரூபாய் திட்டங்கள் நிறைவேற்றுகின்ற நேரத்திலே நம் வருவாய்த் துறை வாரிய உறுப்பினர்கள் மாவட்டங்களுக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்து இரண்டொரு நாளில் அறிக்கை தர இருக்கிறார்கள். அந்த அறிக்கையின்படி மத்திய அரசிடம் நாம் இந்தத் திட்டங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்க இருக்கிறோம். அது எவ்வளவு என்று ஆளுக்கு ஆள் சொல்லிப் பிரச்சினையை குழப்பக் கூடாது என்பதற்காகத்தான் அதைத் திட்டவட்டமாக மத்திய அரசினிடத்தில் அறிவிக்க இருக்கிறோம். நான் டில்லிக்குப் போனபோதுகூட திருமதி இந்திரா காந்தியைச்