பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

295

ஆனால் கண்டனத் தீர்மானத்திற்கு மாறுபட்ட கருத்துக்களை, நம்முடைய அகில இந்திய நிறுவனக் காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. பொன்னப்ப நாடார் அவர்களும், சட்டப் பேரவை சுதந்திராக் கட்சியினுடைய தலைவர் நண்பர் வெங்கடசாமி அவர்களும் நடுநிலையோடுதான் தாங்கள் இந்தத் தீர்மானத்திலே இருக்கப் போவதாகச் சொல்லி, மிக உருக்கமான, ஆனால் உண்மைகள் கோடிட்டுக் காட்டப்பட்ட வகையில் தங்களுடைய உரையை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் அருமை நண்பர் எட்மண்ட் அவர்கள் ஒரு நல்ல வழக்கறிஞராக நின்று சட்ட நுணுக்கங்களை மாத்திரம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, இந்தக் கண்டனத் தீர்மானத்தை

ஆதரித்துப் பேசியிருக்கிறார்கள்.

O

ஆளும் கட்சியினுடைய தோழமைக் கட்சிகளாக இருக்கிற முஸ்லீம் லீக், ஃபார்வெர்டு பிளாக், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி, தமிழரசுக் கட்சி ஆகியவைகளின் சார்பிலே பேசிய அருமைத் தலைவர்களும் உறுப்பினர்களும் இந்தக் கண்டனத் தீர்மானம், எந்த வகையிலே தேவையற்றது என்பதற்கான நல்ல பல விளக்கங்களை எல்லாம், இங்கே எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

கண்டனத் தீர்மானத்தினுடைய வாசகமே அவசர காலச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு அதன் தொடர்பாக இந்திய நாட்டினுடைய பிரதம அமைச்சர் மதிப்பு மிகுந்த இந்திரா காந்தி அம்மையார் அவர்களால் அறிவிக்கப்பட்ட 20 அம்சத் திட்டத்தைத் தமிழகத்திலே திராவிட முன்னேற்றக் கழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்கின்ற குற்றச்சாட்டை அடிப் படையாக வைத்துத்தான் கண்டனத் தீர்மானம் இங்கே

கொடுக்கப்பட்டிருக்கிறது

முதலிலே 10 அம்சத் திட்டங்கள் எவை எவை என்பதை நாம் சிந்தித்து ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பும், அவைகளை இந்த ஆட்சி ஏற்கெனவே நிறைவேற்றத் தொடங்கியுள்ளதா அல்லவா என்பதற்கான விவரங்களை ஆராய்வதற்கு முன்பும் இதற்கு முன்னோடியாகச் சில கருத்துக்களை நான் எடுத்துக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.