கலைஞரின் சட்டமன்ற உரைகள்
297
ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம் எவ்வளவு கோடி ரூபாய்க்கு அறிவிக்கப்பட்டது என்றால், இது 'பிக்ஸட் பிளான் மிகப் பெரும் திட்டம். பிரம்மாண்டமான திட்டம்' என்றெல் லாம் அதற்குத் தலைப்புகள் கொடுத்து, 53,000 கோடி ரூபாய் இந்த ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம் என்று அறிவிக்கப்பட்ட போது, நாம் எல்லாம் மகிழ்ச்சியடைந்தோம். ஏனென்றால் இரண்டு மடங்குக்கு மேலே ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத் திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யத் தொடங்குகிறது ஆகவே, மாநிலங்களின் தேவைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட இயலும் என்றெல்லாம் எண்ணினோம்.
இந்த 53,000 கோடி ரூபாய் திட்டம், அதற்கான வரைவு என்.டி.சி. கூட்டத்திலே தேசீய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் இரண்டு நாட்கள் விவாதிக்கப்பட்டது. முதலமைச்சர் எல்லாம் எங்களுடைய கருத்துக்களை எடுத்துச் சொன்னோம். இப்படி விவாதித்து இரண்டாண்டுக் காலம் கிறது. இந்த இரண்டாண்டுக் காலத்திற்குப் பிறகு ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தினுடைய கதி என்ன என்று தெரியவில்லை.
ஐந்தாண்டுத் திட்டம் ஒவ்வோராண்டுத் திட்டம் என்கின்ற வகையிலேதான் இன்று ஒவ்வொரு மாநிலத்திற்கும் நிதியை ஒதுக்குகின்ற அளவு சுருங்கிப் போயிருக்கிறது. இந்த 53,000 கோடி ரூபாயை, அந்த இலக்கை அடைய முடியுமா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டுத் திட்டத் திற்கு நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்திலே எவ்வளவு ஒதுக்கப்பட்டதோ, அந்த அளவு தொகைதான். இந்த ஐந்தாண்டுத் திட்டக் காலத்திலும் ஒவ்வொரு ஆண்டிற்கும் நம் முடைய மாநிலத்திற்கு ஒதுக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக...
1974-75ஆம் ஆண்டுக்கு 41 கோடி ரூபாயும்,
1975-76ஆம் ஆண்டுக்கு 41 கோடி ரூபாயும்
ற
பணம்
மீதி இருக்கிற மூன்று வருடங்களுக்கும் இதே நிலையில்தான் அவர்கள் நிதியை ஒதுக்கீடு செய்வார்களானால் ஐந்தாண்டுக்கு மொத்தம் 200 கோடி ரூபாய்தான் கிடைக்கும்.