கலைஞரின் சட்டமன்ற உரைகள்
301
திராவிட முன்னேற்றக் கழகம் தன்னுடைய ஆதரவை அளித் திருக்கிறது என்பதற்கு ஏராளமான சான்றுகளை நாம் காண முடியும்.
Dr. H.V. Hande: I am sorry for interrupting. Before the Hon. Chief Minister goes to the next subject, I want to make one point. The Hon. Chief Minister said that the Fifth Five-Year Plan was dropped and in its place the 20 Point Programme came. My information is that this 20 Point Programme is in addition to the Fifth Five-Year Plan and it is not in the place of the Fifth Five-Year Plan. The Fifth Five-Year Plan will continue yearwar or five year war. The 20 Point Progrmme is in addition to the Fifth Five-Year Plan. There can be no contradiction between the two-, the 20 Point Programme and the Fifth Five-Year Plan...
திருமதி. த.ந.அனந்தநாயகி: இந்தப் பத்து அம்சத் திட்டத்தைத் தப்பாகச் சொல்லுகிறீர்கள். மக்களின் பேசிக் நீட்ஸ், உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், தை ஏன் விரிவாகச் சொல்லுகிறார்கள் என்று தெரியவில்லை. கடைசியில் 'இம்போர்ட் அண்டு எக்ஸ்போர்ட்' வியாபாரம். அதை எஸ்.டி.சி. செய்கிறது. அவர்கள் கொள்கைகளை அமல் நடத்திக்
கொண்டுதான் இருக்கிறார்கள்.
Dr. H.V. Hande: This 20 Point Programme is not in lieu of the Fifth Five-Year Plan, but this is in addition to the Fifth Five-Year Plan.
நான் இதைத்தான் தெளிவுபடுத்தினேன்
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: மக்களின் அடிப் படைத் தேவைகள் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க உறையுள் என்பதை எல்லாம் நன்கறிவேன். குறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை. பொதுவாக 'வேக்' ஆகச் சொல்லப்பட் டிருக்கிறது என்றுதான் சொன்னேன். இதைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படியென்றால் இப்போது ஒவ்வொன்றிற்கும் தனியாகச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது? இருபது அம்சத் திட்டத்தில் அந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதைத்தான் விளக்கிச் சொல்லி