பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

303

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எல்லாம் கோடிட்டுக் காட்டினார்கள். முதல் திட்டமாக இன்றியமையாப் பண்டங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கவும், கொள்முதலை விரைவுபடுத்தவும், வழங்கு பணியைச் சீரமைக்கவும் அரசு பல தொடர்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளும் என்பதே பிரதமர் வானொலியில் அறிவித்த முதல் திட்டமாகும். இது 20 அம்சத்தில் ஒரு அம்சம். நம்முடைய தமிழக அரசு இதில் கவனம் செலுத்தியதா இல்லையா? இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகுதான் கவனம் செலுத்தத் தொடங்கியதா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்த ஆண்டு ஜூன் திங்கள் தொடங்கி நிலவி வருகின்ற வாய்ப்பான பருவ மழையின் நிலைகளையொட்டி வேளாண்மை உற்பத்தியைப் பெருக்க அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமானால் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்களே அந்த உற்பத்தி முனையில்கூட பொதுவாக ஆண்டு ஒன்றுக்கு விதை நெல் அளவு கொள்முதல் செய்யப்பட்டு வந்தது என்றால் இதுவரை 9,500 டன்தான் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

நடப்பு வேளாண்மைப் பருவத்தில் 18 ஆயிரம் டன் விதை நெல் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது என்பதை நான் இங்கே தெரிவிப்பதன் மூலம் அந்தத் திட்டத்திற்கு அனுசரணையாகத் தான் காரியங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றனவேயல்லாமல் எதிரான காரியங்கள் நடைபெற வில்லை இங்கே, என்பதைச் சுட்டிக்காட்ட ஆசைப்படுகிறேன்.

புதிய நெல் வகைகளாக ஏ.டி.டி. 31, பூசா 53 ஆகிய அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டு ஏ.டி.டி. 31 பயிரிடப் படும் நிலப்பரப்பு 130 ஆயிரம் ஏக்கர் அளவிலும், பூசா 33 பயிரிடப்படும் நிலப்பரப்பு 56 ஆயிரம் ஏக்கர் என்ற அளவி லும் பயிரிடப்பட்டுள்ளது.

உரம், வேளாண்மை உற்பத்திக்கு மிக முக்கியமானது. பொதுவாக, ஒரு ஆண்டுக்கு வழங்கப்படும் உரத்தின் அளவு இதுவரையில் நமக்கிருந்த கஷ்டங்களின் காரணமாக 20,520