கலைஞரின் சட்டமன்ற உரைகள்
305
இயற்கை பொய்த்துவிடாது. இந்த ஆண்டும் சென்ற ஆண்டைப் போல் கொடுமை புரிந்துவிடாது என்ற நம்பிக்கையின் அடிப்படையின் பேரில் 1975-76ல் எதிர்பார்க்கப்படும் அரிசி உற்பத்தி, கடந்த ஆண்டு 41,66,001 டன்னாக இருந்தது மாறி, 61 லட்சம் டன் அரிசியாக இருக்கும்.
சோளம், கம்பு, மக்காச்சோளம் ஆகியவற்றிலும் 1974-75ல் 14,000 டன் உற்பத்தி இருந்ததற்கு மாறாக 1975-76ல் எதிர் பார்க்கப்படும் உற்பத்தியின் அளவு 17 இலட்சம் டன்னாகும்.
4
பருத்தி 1974-75இல் 2,20,000 பேல்கள் என்ற அளவுக்கு உற்பத்தியாயிற்று. அது வருகிற 1975-76இல் ஏறத்தாழ 4 லட்சம் டன்கள் என்ற அளவுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆகவே, நிச்சயமாக உற்பத்தியில் ஒரு வளர்ச்சியைக் காட்டும்.
கரும்பைப் பற்றி நம்முடைய மாண்புமிகு கே.டி.கே. தங்கமணி அவர்கள்கூட எடுத்துச் சொன்னார்கள். நேற்றைய தினம் கூட இந்திய சர்க்காரில் இருந்து எழுதப்பட்ட கடிதங்கள் வந்திருக்கின்றன. அதில் லெவி சர்க்கரை விலையை உயர்த்த இயலாது என்று சொல்லிவிட்டார்கள். அப்படி உயர்த்த இயலாது என்று சொல்லியிருப்பது அகில இந்திய அளவிலா என்றால் இல்லை. வடபுலத்தில் இருக்கிற மாநிலங்களுக்கு, உயர்த்தித் தரப்படும், ஆனால் நம்முடைய கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது, என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார்கள். இதன் காரணமாகக் கரும்பு சாகுபடி செய்கிற விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதனையும், இதன் காரணமாகக் கரும்பு சாகுபடி குறையும் என்பதனையும், தவிர்க்க முடியாத சில கஷ்ட நிலைக்கு ஆளாக நேரிடும் என்பதனையும் இந்த நேரத்தில் நான் எடுத்துக் காட்டாமல் இருக்க முடியாது.
திரு.கே.டி.கே. தங்கமணி: சர்க்கரை விலை சம்பந்தமாக லெவி சர்க்கரை என்றும், லெவிக்கு அப்பாற்பட்ட சர்க்கரை என்றும் இருப்பது சரியல்ல என்பது எங்களுடைய பொதுவான நிலை. அதை முதலமைச்சர் அவர்கள் அறிவார்கள். லெவி
11-க.ச.உ.(அ.தீ.) பா-2