306
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
சர்க்கரை விலை நிர்ணயம் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகா ஆகியவற்றில் அதிகமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக இரண்டுக்கும் ஒரே விலை இருக்கவேண்டுமென்ற நிலையை அரசு இங்கு எடுக்குமானால், அதை ஆதரிக்க நான் தயாராக இருக்கிறேன்
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: நான் இதை மகிழ்ச்சி யோடு வரவேற்கிறேன். அதனால்தான் திரு. தங்கமணி அவர்கள் நிதானமாக நியாயங்களை உணர்ந்து பேசினார்கள் என்று ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன்.
திரு. பெ. சீனிவாசன்: அந்தக் கோரிக்கையை மத்திய சர்க்கார் நிராகரிக்கக் காரணம் ஏதாவது இருக்கிறதா? காரணங் களைக் கேட்டார்களா?
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: இப்போதுதான் காரணங்களை எதற்கும் கேட்கக்கூடாதே.
திருமதி த.ந. அனந்தநாயகி: சார் ஆன் எ பாயின்ட் ஆப் ஆர்டர். எதற்கும் கேட்கக் கூடாது என்று யாரும் சொல்ல வில்லை. குதிரைக்குக் குர்ரம் என்றால் யானைக்குக் அர்ரம் என்று சொல்லாதீர்கள். எதற்குக் கேட்க வேண்டும், எதற்குக் கேட்கக் கூடாது என்கிற வரையறை இருக்கிறது.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: அந்த வரை யறையை உங்களுக்குத் தேவையானதற்கு நீங்கள் பொருத்திக் கொள்ளுங்கள். எங்களுக்குத் தேவையானதற்கு நாங்கள் பொருத்திக் கொள்கிறோம்.
தலைவர் அவர்களே! கடுமையான வறட்சி நிலைமை இருந்த நேரத்தில்கூட நம் தமிழகத்தில் உள்ள மொத்தம் 98 லட்சம் குடும்பங்களில், 52 லட்சம் குடும்பங்களுக்கு நாம், போதிய உணவு தர முடியாவிட்டாலும், ஓரளவு அரிசி வழங்க முயற்சிகளை மேற்கொண்டோம். அதற்கு நாம் எடுத்த நடவடிக்கைகளாகத் தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் கழகத்தின் சார்பிலும், கூட்டுறவுச் சங்கங்கள் சார்பிலும், உள்ளாட்சி மன்றங்கள் நடத்துகின்ற சில்லறை விற்பனைக்