பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

த மிழ்நாட்டில்

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

10 லட்சம்

ஏக்கர் நிலத்தை விநியோகித்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது; இது

என்ன மாயா பஜாரா? (சிரிப்பு)

டாக்டர் எச்.வி. ஹாண்டே: எதிலே?

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: நூறு புதிய சாதனைகள் என்ற புத்தகம் (தமிழில்) பக்கம் 21இல்.

அவசர நிலைப் பிரகடனத்திற்குப் பிறகு எல்லா மாநிலங் களும் நில மறு விநியோகத் திட்டத்தைத் தீவிரப்படுத்தி யுள்ளன. கேரளாவில் 1,30,000 ஹெக்டார் நிலம் 3,28,500 நிலமில்லாத ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் சரியாக இருக்க முடியுமா என்றால் முடியாது. கேரள அரசாங்கத்தைக் கேட்டால்தான் இல்லையென்று சொல்லுவார்கள். தமிழ்நாடு 10 லட்சம் ஏக்கர் நிலத்தை விநியோகித்துள்ளது என்று கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 10 லட்சம் ஏக்கர் கொடுக்கவில்லை.

டாக்டர் எச்.வி. ஹண்டே: ப்ரிண்டர்ஸ் மிஸ்டேக்காக இருக்கும்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: ஒன்று போட்டு பக்கத்தில் சைபர்களாகப் போட்டிருந்தால் ஒரு சைபர் அதிக மாகக்கூடப் போய்விட்டதோ என்று நினைக்கலாம். ஆனால் இதிலே பத்து என்று எண்ணினால் எழுதி, அதன் பக்கத்தில் லட்சம் என்று எழுத்தால் போடப்பட்டிருக்கிறது.

திருமதி த.ந. அனந்தநாயகி: இந்தத் தகவலையே தவறாக தமிழக அரசுதான் கொடுத்திருக்கும். இது உங்கள் தவறாகவே இருக்கலாம்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: இப்படித் தவறாக நாங்கள் வேண்டுமென்றே கொடுத்திருந்தால், பார் பார் தமிழ் நாட்டில் பத்து லட்சம் ஏக்கரா கொடுத்திருக்கிறோம் என்று நாங்கள் ஜம்பம் அடித்துக் கொண்டிருக்கலாம்.

ஆகவே, சில "நூறு புதிய சாதனைகள்" என்கிற புத்தகம் இந்தத் தகவலைத் தருகிற காரணத்தால், இதை நான் மேற் கோளாக எடுத்துக்காட்ட விரும்பவில்லை. அதற்காக மத்திய