பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

ஆற்காடு வீராசாமி கொண்டு வந்த உரிமைப்

பிரச்சினை

உரை : 56

நாள்: 21.3.1973

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: தலைவர் அவர்களே, நண்பர் வீராசாமி அவர்கள் கொண்டுவந்த இந்த உரிமைப் பிரச்சனைமீது எல்லாக் கட்சிகளின் சார்பிலும் கருத்துக்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பத்திரிகை யிலே வந்திருப்பதில், நான் இந்த அவையினுடைய உறுப்பினர்களை ஒன்றும் தெரியாத சாதாரணமானவர்கள் என்று கருதிக்கொண்டு திமிரோடு பதில் சொன்னேன் என்ற வாசகம் ஆகும். இந்த அவையில் கடந்த நான்கைந்து ஆண்டுக் காலமாக மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரிடத்திலும் நான் எந்த அளவிற்கு நடந்து கொண்டிருக்கிறேன் என்பதும் எந்த நேரத்திலேயும் நான் திமிரோடு நடந்துகொண்டிருக்கிறேனா என்பதும் மாண்புமிகு உறுப்பினர்களுக்குத் தெரியும். மிகச் சூடான விவாதம் நடந்து கொண்டிருக்கும்பொழுது சூடு தணியவேண்டும் என்ற முறையிலே மிகுந்த அமைதியோடும். அடக்க உணர்வோடும் நான் நடந்து கொண்டிருக்கின்றேன்.

கூட

1971-ஆம் ஆண்டு தேர்தலுக்குப்பிறகு பதவியேற்ற தற்குப் பிறகு இந்த அவையிலே உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரையும் நான் பாராட்டி அவர்கள் எந்த அளவிற்குப் பெருந்தன்மையோடு இந்த அவையை நடத்திச் செல்கிறார்கள் என்பதையும், அவர்கள் துணையோடு இந்த அவையை நடத்திச்செல்ல வேண்டுமென்பதையும் குறிப்பிட்டு ஒவ்வொருவரையும் தனித்தனியாகக் குறிப்பிட்டுப் பேசியிருக் கிறேன். இந்த அவையிலே உள்ள யாரையுமே சாதாரணமானவர் என்றோ ஒன்றும் தெரியாத நிலையில் உள்ளவர் என்றோ கருதியதே இல்லை என்பதையும் திமிரோடு நடந்துகொள்ள