கலைஞரின் சட்டமன்ற உரைகள்
311
பொது அறக்கட்டளைக்கு ஒரு வரம்பு வைத்து விட்டோம். அந்த வரம்பு ஆந்திரத்தில் கிடையாது. கேரளாவில் கிடையாது. பொது அறக்கட்டளைகள் அங்கே எவ்வளவு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவற்றின் வருமானம் அந்த அறக்கட்டளைகளுக்கே செலவிடப்பட வேண்டும். இது அங்கே. இங்கே நாம் பொது அறக்கட்டளைகள் இவ்வளவுதான் வைத்துக் கொள்ள வேண்டுமென்று நிர்ணயித்து, அதில் வருகின்ற வருமானம் அந்த அறக்கட்டளைக்கே செலவிடப்பட வேண்டும் என்று சட்டம் செய்திருக்கிறோம். அதுவும் 1.3.72இல் என்னென்ன அறக்கட்டளைகள் இருந்தனவோ அந்த அறக்கட்டளை களுக்குத்தான் அது பொருந்தும். அதற்குப் பிறகு புதிதாக அறக்கட்டளைகள் தோன்றி, இந்தச் சட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்று சட்டம் செய்திருக்கிறோம். அதுவும் இன்னின்ன அறக்கட்டளைக்கு இவ்வளவுதான் நிலம் என்று திட்டவட்டமாகச் செய்திருக்கிறோம்.
இந்தப் பொது அறக்கட்டளைகளில், கல்லூரி என்றால் 40 ஸ்டாண்டர்ட் ஏக்கருக்கு மேல் வைத்துக்கொள்ளக்கூடாது. உயர்நிலைப்பள்ளியாக இருந்தால் 20 ஸ்டாண்டர்ட் ஏக்கர், ஆரம்பப் பள்ளியாக இருந்தால் 10 ஸ்டாண்டர்ட் ஏக்கர், மாணவர் விடுதியாக இருந்தால் 25 ஸ்டாண்டர்ட் ஏக்கர், தொழில் கல்விக்கூடமாக இருந்தால் 25 ஸ்டாண்டர்ட் ஏக்கர், விவசாயப் பள்ளியாக இருந்தால் 25 ஸ்டாண்டர்ட் ஏக்கர், அநாதை இல்லத்திற்கு 25 ஸ்டாண்டர்ட் ஏக்கர், அதர் டிரஸ்ட்ஸ், மற்ற அறக்கட்டளைகளுக்கு 5 ஸ்டாண்டர்ட் ஏக்கருக்கு மேல் வைத்துக்கொள்ளக் கூடாது என்று நிர்ணயித்து இருக்கிறோம்
அடுத்து, குத்தகைச் சாகுபடிதாரர்களுக்கு ஆவணங்கள் வேண்டும், பதிவு செய்கின்ற முறை வேண்டுமென்று பிரதமர் அறிவித்திருக்கிறார்கள். நாங்கள் அதையும் செய்திருக்கிறோம். அவர்கள் அறிவிப்புக்குப் பிறகு அல்ல, 1969ஆம் ஆண்டிலே தமிழ்நாடு வேளாண்மை நிலக் குத்தகை உரிமைகள் பதி வேட்டுச் சட்டத்தை நாம் இந்த மன்றத்திலே நிறைவேற்றி யிருக்கிறோம். இதுவரையில் இப்படிப் பதிவு செய்த குத்தகை தாரர்களின் எண்ணிக்கை 3,99,350 என்றும் இவர்களது