பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

313

ஏக்கரில் 135 ஸ்டாண்டர்டு ஏக்கரை அந்த அமைச்சருக்கு மிக நெருங்கிய சொந்தக்காரர் விற்றுவிட்டார். உச்சவரம்புச் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொண்டார். இந்த இரண்டாண்டுக் காலத்திலே, 6.4.60லிருந்து 2.10.62க்குள்ளாக யாரும் இந்தச் சட்டத்தை ஏமாற்றி அவர்களுக்குரிய நிலத்தை விற்கக்கூடாது என்று இருந்தும்கூட பணம் வருகிறதே அப்பா என்ற காரணத் தினாலும், உச்சவரம்புச் சட்டம் வருகிறதே அப்பா என்ற அச்சத்தாலும், 141 ஸ்டாண்டர்டு ஏக்கராவில் 132 ஸ்டாண்டர்டு ஏக்கராவை விற்றுவிட்டார். அதற்கு அவர்மீது நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். 1967க்குள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். 1967 வரையில் அந்த அமைச்சருடைய மிக முக்கியமான சொந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. 1967இல் அண்ணா தலைமையில் ஆட்சி வந்தபிறகு, முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி வந்தபிறகு, இந்தத் தவறுக்கு நடவடிக்கை இந்த அரசின் சார்பில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, மிகச் சாதாரணமானவர்களால்கூட அந்தப் பினாமி முறை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அமைச்சரவையில், மிக முக்கியமான ஒருவரின் சொந்தக்காரரால்தான்.

திருமதி த.ந. அனந்தநாயகி: அமைச்சருடைய மிக நெருங் கிய சொந்தக்காரர் என்று டிரமாட்டைஸ் பண்ண வேண்டாம், அவர் பெயரைச் சொல்ல வேண்டியதுதானே, எண்ணினதே தப்பு. அவர் பெயரைச் சொல்ல வேண்டியதுதானே!

சொல்ல

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: நண்பர் வரதப்பன் அவர்கள். அம்மையார் அவர்களுக்கு அதைச் வேண்டுமென்று விருப்பம்.

திருமதி த.ந. அனந்தநாயகி: அம்மையார் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்வீர்களா? அம்மையார் விருப் பம் என்று சொல்லி எப்படியோ என்னை வம்பில் இழுத்து விடுவதற்காக இதை ஏன் சொல்ல வேண்டும்?

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: அடுத்து, மூன்றா வது அம்சம். கிராமப் பகுதிகளில் வீட்டு மனைகள் வழங்கும் திட்டம் வெகுவாக விரிவாக்கப்படும். நிலமற்றவர்களுக்கு வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கச் சட்டங்கள் கொண்டு வரப் படும். இது பிரதமர் அவர்களுடைய அறிவிப்பு.