பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

333

நான் நம்முடைய திரு. கே.டி.கே. தங்கமணி அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இதோ ஒரு புத்தகம். மார்டின் லூதர் கிங், வினாக்கள் விடைகள். ஒரு ரூபாய்தான் இதன் விலை. பல தனியார் புத்தகங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

நியூ செகன்டரி ஸ்கூல் ஜாக்ரஃபி என்ற புத்தகம் தனியார் வெளியீடு. புவியியல் ரூ.13.50. இதனுடைய பக்கங்கள் 420. இது நம் வெளியீடு, பெயர் அறிவியல், 402 பக்கங்கள். விலை ரூ. 4.80. பதின்மூன்றரை ரூபாய் எங்கே, நான்கு ரூபாய் எண்பது காசு எங்கே? இதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆக, இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் இதையெல்லாம் அறிவிப்பதற்கு முன்பாகவே நம் மாநிலத்தில் இத்தகைய பணிகளை நாம் மேற்கொண்டிருக்கிறோம் என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறேன்.

அடுத்து, படித்த இளைஞர்களுக்குத் தொழிற் பயிற்சித் திட்டத்தின் கீழ் பயிற்சி தருதல்; இத்திட்டத்தில் சிறப்புக் கவனம் செலுத்தப்படும். இது பிரதமர் அறிவித்த 15-வது அம்சத் திட்டம்.

நம்முடைய மாண்புமிகு அமைச்சர் ராசாராம் அவர்கள் 107 விகிதத்தைத் தாண்டிவிட்டோம் என்று ஒரு அறிக்கை கொடுத்தார்கள். எனக்கேகூட அது எப்படி 107 சதவிகிதம் என்று ஆச்சரியமாக இருந்தது. பிறகு புள்ளிவிவரங்களை எடுத்துப் பார்த்தால், நம்முடைய மாநிலத்தில் தனியார் துறையில் 4.264 இடங்களும், மாநில அரசுத் துறையில் 2,123 இடங்களும், ஆக மொத்தம் 6,387 இடங்கள் பயிற்சியாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது 107.45 சதவிகிதம். நாம் வரையறுத்த இலக்கையும் மிஞ்சி படித்த இளைஞர்களுக்குப் பயிற்சித் திட்டம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதையெல்லாம் விளம்பரப்படுத்த வேண்டாமா என்று அனந்தநாயகி அம்மையார் அவர்கள் கேட்டார்கள். கர்நாடக மாநிலத்தில் விளம்பரப்படுத்தப்பட்டு இருக்கிறது. "இருபது அம்சத் திட்டம்” என்று பிரதமருடைய படத்தையும் போட்டு, முதலமைச்சருடைய படத்தையும் போட்டு விளம்பரப்படுத்தி