கலைஞரின் சட்டமன்ற உரைகள்
335
பட்டது. ஆகவேதான் படம் போட்டால்தான் மறுப்புத் தெரிவிப்பார்களோ என்பதற்காகப் படம் போடவில்லையே தவிர, விளம்பரத்தை வெளியிட்டு இருக்கிறோம்.
திருமதி த.ந.அனந்தநாயகி: இப்போது காட்டினார்களே, அந்த மாதிரியா படம் போட்டார்கள்? அதற்கு முறை, தகுதி எல்லாம் உண்டு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: என்ன முறை, தகுதி என்று சொன்னால் சரியாக இருக்கும்.
திருமதி த.ந. அனந்தநாயகி: அதுதான் பிரைம் மினிஸ்டர் செக்ரேடேரியட்டிலிருந்தே சொல்லியிருக்கிறார்களே, நான் என்ன சொல்வது?
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: பிரதமர் அலுவலகத் திலிருந்து சொன்னதால் படம் போடவில்லை என்றுதான் சான்னேன். அவ்வளவுதான்.
16வது அம்சம், "அடிமைத் தொழிலாளர் முறை ஒழிக்கப் பட வேண்டும்." தமிழகத்தைப் பொறுத்தவரையில் அது இல்லை. என்று நாம் வாதிக்கிறோம். ஓரிரு இடங்களில் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் அதற்கு இன்றைக்கு மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துவிட்டது. எங்கேயாவது ஒன்றிரண்டு தலைகாட்டினாலும் நிச்சயமாக அது ஒழிக்கப் படும்; அதில் நமக்கு எந்தவிதமான மறுப்பும் இல்லை.
17-வது அம்சம். "கடத்தல்காரர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்குத் தனிச்சட்டம் கொண்டு வரப்படும்” -இது மத்திய அரசு கொண்டு வரவேண்டியதாகும். ஆகவே, கண்டனத் தீர்மானம் அங்கே வரவேண்டும். இங்கே கொண்டு வருவது பொருத்தமல்ல.
18-வது அம்சம், “தொழிலில் முதலீடு செய்வதற்கான இப்போதுள்ள முறைகளைத் தளர்த்தி, இறக்குமதி லைசென்சைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல்', இதிலே கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சில அபிப்பிராய பேதங்கள் உண்டு என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் கூட, இது மத்திய அரசு எடுக்கவேண்டிய முயற்சி என்பதை இந்த மாமன்றம் நன்கு