பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

341

என்று எனக்குத் தெரியவில்லை. தேச பக்தியுள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.

Those who think that the popularisation of the 20 point programme is by itself a guarantee for socio-economic advance tend to forget that the first party to welcome it முதன்முறை வரவேற்றார்கள்.

The first party to welcome it within a couple of hours of announcement, as pragmatically realistic was the Federation Indian Chambers of Commerce and Industry, who have already been fortified by the Prime Minister's official assurance again further nationalisation.

இனிமேல் தேசீயமயம் எதுவும் ஆக்கப்படமாட்டாது என்று பிரதம மந்திரி உறுதிமொழி வெளியிட்டதும் முதன் முதலில் அப்படி அறிவிக்கப்பட்ட 2 மணி நேரத்திற்குள் அதனை ஆதரித்தவர்கள் யார் என்பதை நிக்கல் சக்கரவர்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய பெருமைமிகுந்த உறுப்பினர், குடியரசுத் தலைவர் வாழ்த்துரை வழங்கப்பட்ட ‘மெயின் ஸ்ட்ரீம்' பத்திரிகையின் ஆசிரியர், அதன் 13-வது ஆண்டுமலரில் சிறப்பாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இது ஒன்றில் இருந்தே இந்த 20 அம்சத் திட்டத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்பு சாதாரண மக்களின் சார்பாக அளிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இருபது அம்சத் திட்டத்தை நம்முடைய கையிலே கொடுத்துவிட்டு, இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு எந்தவிதமான நிதி ஆதாரங்களையும் பெருக்குகின்ற வழிவகை களைச் சொல்லாமல் அல்லது சொல்வதற்கு முன் வராமல், நம் முடைய பெரியவர் திரு. மணலி கந்தசாமி அவர்கள் எடுத்துச் சொன்னது போல, பாராளுமன்றத்திலே இதற்கு ஒரு பாராட்டுத் தெரிவித்தார்களேயல்லாமல், பாராளுமன்றத்திலே இந்த 20 அம்சத் திட்டத்திற்கு இவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்களா அல்லது எல்லா முதலமைச்சர்களையும் அழைத்து, தேசீய வளர்ச்சிக் குழுவைக் கூட்டி, எந்தெந்த மாநிலத்தில் நிறைவேற்றப் போகிறீர்கள், எப்படி நிறைவேற்றப் போகிறீர்கள், இதுவரை செய்யப்பட்ட