கலைஞரின் சட்டமன்ற உரைகள்
343
மேலாக செய்திருக்கிற இந்த அரசைப் பார்த்து, இந்த அரசு எடுத்துள்ள சமூக நலத்திட்டங்களில், கண்ணொளி, உடல் ஊனமுற்றோர் புதுவாழ்வுத் திட்டம், தொழுநோய் பிச்சைக் காரர் மறுவாழ்வுத்திட்டம், விதவைகள் நலவாழ்வு, ஆதரவற்ற அனாதை சிறுவர்களுக்கு இல்லங்கள் என்று இப்படி நல்ல பல திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டிருக்கிற இந்த அரசைப் பார்த்து, காந்தியார் வழியில் நின்று நாங்கள் நடத்துகிறோம் என்பதற்கு அடையாளமாகக் காங்கிரஸ்காரர்களும் செய்யாத காரியத்தை, தமிழகத்தில் மது விலக்கை இடையிலே ஒத்தி வைத்திருந்தாலும், மீண்டும் நடைமுறைப்படுத்தி, பரிசுத் திட்டத்தை அறவே ஒழித்து, குதிரைப்பந்தயத்தை நிறுத்தி, இப்படி 20 அம்சங்களுக்கு மேலாக நிறைவேற்றி வரும் இந்த அரசைப் பார்த்து, 20 அம்சத் திட்டத்தில் எதுவுமே செய்யவில்லை என்று கண்டனம் செய்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
குடிநீர் வாரியம் எந்த மாநிலத்தில் இருக்கிறது? மற்ற எந்த மாநிலத்திலாவது குடிசைமாற்று வாரியம் இருக்கிறதா? அரிசன வீட்டு வசதி வாரியம் இருக்கிறதா? இப்படிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத் திட்டங்கள் என்று தேர்ந்து எடுத்து வானொலியில் அறிவித்தது மாத்திரம்தான் திட்டங்கள் என்று வைத்துக்கொண்டு, 20 மட்டுமல்ல, 21, 22 என்று சொல்லத் தக்க அளவிற்கு பெரிய முற்போக்கான திட்டங்களைப் போட்டு, அவற்றை நிறைவேற்றிக்கொண்டிருக்கிற இந்த அரசைப்பார்த்து கண்டிக்கிறோம் என்று சொன்னால் என்ன அர்த்தம்?
இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவருகிறபோது அவசர காலத்திற்குப் பிறகு, என்ற ஒரு வார்த்தையை நண்பர் அரங் கண்ணல் அவர்கள் எடுத்துக்காட்டியது போல, போட்டிருக் கிறார்கள். அவசர காலத்திற்குப் பிறகா இந்தக் காரியங்களை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம்? அவசர காலத்திற்கு முன்னாலேயே இந்தக் காரியங்களை நிறைவேற்றவில்லையா? கடந்த ஆறேழு ஆண்டுகளாக நிறைவேற்றவில்லையா? இப்போது அவர்கள் சொன்னபிறகுதான் இதற்கு உயிரே வந்ததா? இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்ற முடியாத காரணத்தினால்தான் இந்த 20