பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

bureaucracy. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீட்டப்படுகிறது என்று விளக்கம் தரப்படவில்லை.

Emergency means more power more power for the Ministers, Emergency means more power to issue threats to the democratic rights and liberties of the people. Emergency means a sword in the hands of the ruling party, to brandish over the heads of the Opposition parties and Emergency means that when the elections take place, you can go and tell the people that if they voted against you, then the Defence of India Rules would be used as has been done in some parts of the country. This is called emergency.

இரண்டாண்டுக் காலம் தாமதித்து எமர்ஜன்சி என்று பூபேஷ் குப்தா சொல்லவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு உள்ள நெருக்கடி நிலைக்கு என்று சொல்லவில்லை. ஆக, நெருக் கடிக்குப் பிறகு, அவர் தருகின்ற விளக்கம் இது. இந்த விளக்கம் அப்போதுதான் சொல்லவில்லை; நெருக்கடி நிலை என்பதற்குத் தான் விளக்கங்களைச் சொல்கிறார். அவை எப்போதும் நெருக்கடி நிலை கண்டனத்திற்குப் பொருந்தும்

சிலபேர் கேட்டார்கள். அண்ணா இருந்தால் இதை ஆதரித்து பேசியிருப்பார்கள் என்று சொன்னார்கள். ஏதோ அண்ணாவுடனேயே நெருங்கிப் பழகியவர்களைப்போல, என்னைப்போல, நாவலரைப் போல, பேராசிரியரைப் போல, மதியைப் போல, மற்றவர்களைப் போல, நெருங்கிப் பழகியது போல் சொன்னார்கள். சத்தியவாணி முத்து அவர்கள் கூட இருந்திருக்கிறார். நான் மறுக்கவில்லை. ஆனால் அண்ணா வுடனேயே நெருங்கி இருந்தவர்களைப்போல சிலர் கூறு கிறார்கள்.

ஆனால் நெருங்கி இருந்த சத்தியவாணிமுத்து அம்மை யார் செய்ததுதான் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. அண்ணா இதை ஏற்கெனவே ஆதரித்து இருக்கிறார் என்றுகூடச் சொன்னார்கள்.

நண்பர் சீனிவாசன் அவர்கள்கூட இதை அண்ணா வழியில்தான் ஆதரிக்கிறோம் என்று சொன்னார்.