356
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
பீகார் கிளர்ச்சியைப் பற்றி அவர்களே குறிப்பிட்டார்கள். அதற்கு அவர்களே விளக்கமும் சொன்னார்கள். பீகார் கிளர்ச்சி யைப் பற்றிக் கர்நாடக மாநிலத்தில் நிருபர்கள் என்னைச் சந்தித்த போது நான் அவர்களிடம் சொன்னேன், “ஐந்து ஆண்டு காலம் ஜனநாயகத்தில் பொறுத்திருக்க வேண்டும். இடையில் அமளி செய்து ஆட்சியைக் கவிழ்த்து விடுவதை நான் விரும்பவில்லை. இன்னும் தெளிவாகச் சொன்னேன், "நாங்கள் ஆட்சியில் இருப்பதன் காரணமாக அப்படிச் சொல்கிறோம் என்று வேண்டாம். நாங்கள் எதிர்க்கட்சியாக செயல்பட்ட காலத்திலும், அண்ணா தலைமையில் செயல்பட்ட அந்தக் காலத்திலும், இந்த முறை நாங்கள் கடைபிடித்த முறையல்ல. எங்களுக்குப் பிடித்தமான முறையல்ல" என்பதைப் பங்களூரில் நிருபர்கள் கூட்டத்தில் மிகத் திட்டவட்டமாக எடுத்துச்சொன்னேன்.
பீகார் கிளர்ச்சிக்கும் கிட்டத்தட்ட 1972-ம் ஆண்டு விட்டு விலகிய சில நண்பர்கள் பிரிந்துசென்ற நேரத்தில், நடைபெற்ற தமிழ்நாட்டுக் கிளர்ச்சிக்கும் என்ன வித்தியாசம் என்று மணலி கந்தசாமி அவர்கள் கேட்டார்கள். நண்பர் லத்தீப் கூறுகின்ற நேரத்திலேகூட குறிப்பிட்டார்கள். எம்.எல்.ஏ. ராஜினாமாச் செய்யச் சொல்லலாமா என்று மாரிமுத்து அவர்கள் கேட்டார்கள். இங்கே எங்கள் உறுப்பினர்களை ராஜினாமா செய்யச் சொல்லி ஊர்வலம் நடத்தினார்கள். ஆனால் அமைதியாக நடத்தினோம் என்று சொன்னார்கள். நான் அந்த விவரங்களுக்கு எல்லாம் வெகு விளக்கமாகச் செல்ல விரும்பவில்லை.
ஜெயப்பிரகாஷ் அவர்களோ, மொரார்ஜி தேசாயோ, மேத்தாவோ அல்லது வேறு சில பிரமுகர்களோ பிரதமர்களைப் பற்றி வேகமாகப் பேசிவிடுகிறார்கள். ஆகவே, இப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்க நேர்ந்தது என்று சொன்னார்கள்.
நான் நண்பர் மாரிமுத்து அவர்களுக்கு ஞாபகப்படுத்த விழைகின்றேன். கோவையில் தேர்தல் நடைபெற்றபோது அ.தி.மு.க.விற்கும் இந்திரா காங்கிரசுக்கும் உறவு இல்லை. இந்த நேரத்தில் கோவையில் நம்முடைய நண்பர் அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் பேசியிருக்கிறார், "வீட்டிற்காக