கலைஞரின் சட்டமன்ற உரைகள்
357
பிரதமரா, நாட்டிற்காக பிரதமரா”, அவர்கள் ஏடான 'தென்னகத் தில் வந்திருக்கிறது. இந்தச் செய்தி. “பிரிவினையைத் தூண்டிய குற்றவாளி இந்திராகாந்திதான்", கோவைப் பொதுக்கூட்டத்தில் மனோகரன் உரை; இதைச் சென்ற ஆண்டுதான் 6.2.74 கோவையில் மனோகரன் பேசியிருக்கிறார்.
அடுத்தது, புதுவைத் தேர்தலின்போது என்னுடைய அருமை தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் புதுவைத் தொகுதி யோடு சேர்ந்த பகுதியில் சென்று பேசுகிறார். “1971இல் இந்திரா காந்தி கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன ஏன்?” என்று கேட்கிறார். ஆக, வாக்குறுதிகள் தொடர்ந்து காற்றில் பறக்கவிடப்பட்டு வருகின்றன. அது பத்து அம்சத் திட்டமாக இருந்தாலும், அரசியல் சட்டத்தில் இடம் பெற்றிருக்கிற குறிக்கோள்களானாலும், இவர்களுடைய இருபத்திரண்டாண்டு கால ஆட்சியிலே தொடர்ந்து காற்றிலே பறக்கவிடப்பட்டு வருகின்றன. அதை எம்.ஜி.ஆர். அவர்கள் மாஹியில் பேசியபோது பிரதமருக்குத் தக்க பாடம் கற்பிப் போம் என்று கூறியுள்ளார். எந்த வகையில் என்று தெரியாது. கோபாலபுரத்திற்கு வந்ததைப் போலவோ, என்னவோ எனக்குத் தெரியாது.
திரு. பெ. சீனிவாசன்: தேர்தல் பாடம்
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: தேர்தல் பாடமா?
திரு. பெ. சீனிவாசன்: முதலமைச்சர் நன்றாகத் தேடிப் பிடித்து அதை ஒரே ஒரு ஆதாரத்தை வைத்துக்கொண்டு தேர்தல் நேரத்தில் பேசியதை, தேர்தல் நேரத்தில் தக்க பாடம் என்றால், தேர்தல் பாடம்!
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: இது அமைதியான பேச்சா? சரி. இன்னொன்றைச் சொல்கிறேன். "இந்திராவைக் கைது செய்.” ‘அண்ணா தி.மு.க. எம்.பி. மனோகரன் ஆவேசம், இதுவும் பத்திரிகையில் வந்ததுதான்.
இப்படி இந்திராவைக் கைது செய் என்றும், பிரதமர் ஒரு பிரிவினைவாதி என்றும், பிரிவினையைத் தூண்டுகின்ற குற்றவாளி என்றும் பேசிய ஒரு கட்சி, இன்றைய தினம் ஏதோ