பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

35

கொள்கிறேன் என்று கூறிவிட்டபடியால் அதில் மேலும் விவாதம் தேவை இல்லை என்று கூறி முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது

உண்மையில் வேணுகோபால் என்ற மாறனுக்கு விசைப் படகு வழங்கப்பட்டது 1969-லிருந்து 1976 வரை என்ற காலத்திற்குள் இல்லை என்பது அரசு ஆவணங்களில் முறையாகப் பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும். அமைச்சர் அவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். இருந்தும் தற்காலிகமான வெற்றியை மனதில் கருதிக்கொண்டு, 1969-க்கும் 1976-க்கும் இடையேதான் நடைபெற்றதாக அழுத்தந்திருத்தமாக உண்மைக்குப் புறம்பான ஒன்றை அவையில் உறுப்பினர்களை திசை திருப்பியிருக்கிறார்.

கூறி

அவைக்கு வேண்டுமென்றே தவறான தகவல்களைத் தருவது அவை உரிமையை மீறிய செயலாகும் என்பதில் எவ்வித ஐயமும் இருக்க முடியாது. வேணுகோபால் என்ற மாறன் என்பவருக்கு எப்போது விசைப்படகு வழங்கப்பட்டது என்ற விவரத்தை அவரே கைப்பட எனக்கு எழுதியுள்ள கடிதத்தின் நகலை இத்துடன் தங்கள் பார்வைக்கு இணைத்திருக்கிறேன்.”

அதில் கூறியிருப்பது, 1962-ல்தான் வேணுகோபால் என்ற மாறனுக்கு விசைப்படகு வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டி ருக்கிறார். அந்தக் கடிதம் 'இன்று சட்டமன்றக் காலை நிகழ்ச்சியில் (5-1-1978) நான் மீனவனே இல்லை என்று மாண்புமிகு மீன் இலாக்கா அமைச்சர் அவர்கள் கூறியதைக் கேட்டு வருந்தி தங்களுக்கு இந்தக் கடிதம் எழுதுகிறேன்.

நான் மீனவ குடியில் பிறந்தவன். என் தந்தை தூண்டிலில் மீன் பிடித்து தொழில் செய்து வாழ்ந்து வந்தோம். எனக்கு 1962ஆம் ஆண்டில் மீன் இலாக்காவினால் ஐ.பி.66 என்ற விசைப்படகு வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு மீன் இலாக்காவிலிருந்து எவ்வித படகும் நான் வாங்கவில்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புள்ள,

வேணுகோபால் என்னும் மாறன்."

இதை அவையின் முன் வைத்து இதை உரிமை மீறுகிற நிலையில் உணவு அமைச்சர் அவர்கள் பேசியிருக்கிறார்கள் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவந்து தங்கள் தீர்ப்பை எதிர்பார்க்கிறேன்.