கலைஞரின் சட்டமன்ற உரைகள்
363
நடவடிக்கைகளிலே கலந்துகொள்வது இல்லை என்று முடிவு செய்தார்களே தவிர, வேறல்ல
திரு. ஏ.ஆர். மாரிமுத்து: இந்த பாய்காட் எவ்வளவு நாட்கள் இருக்கும் என்று முதலமைச்சரவர்கள் கூறுவார்களா என்று தெரியவில்லை.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: தலைவரவர்களே! இந்த பாய்காட் அதிக நாள் நீடிக்காது என்றே கருதுகிறோம். ஏனென்றால், தமிழ்நாடு வழிகாட்டியிருக்கிறது. அதைப் பார்த்துப் பாராளுமன்றம் திருத்திக்கொள்ளும் என்று நம்பு கிறேன்.
திரு. ஏ.ஆர். மாரிமுத்து: ஆக இந்த அளவிற்கு அரசியல் ரீதியான என்னுடைய கருத்துக்களைச் சொல்லிவிட்டு பொருளாதார ரீதியான பிரச்சினைகளைப் பற்றி என்னுடைய கருத்துக்களைச் சொல்ல விரும்புகிறேன். நிலச்சீர்திருத்தம் பற்றி அவர்கள் குறிப்பிடும்போது புள்ளி விவரங்களையெல்லாம் எடுத்துச் சொன்னார்கள். மத்திய அரசு வெளியிட்ட ஒரு வெளியீட்டைக் காண்பித்தார்கள். அதில் ஒரு வரி அச்சுப் பிழையாக இருந்திருக்கலாம். அதைக்காட்டி எல்லாவற்றை யுமே நம்பவில்லை என்று சொல்லி ஆதாரம் காட்ட இலாயக்கு இல்லை என்று சொல்லக்கூடாது.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: ஆதாரம் காட்ட இலாயக்கு இல்லை என்று நான் சொல்லவில்லை. நான் சொல்லாமல் இதைச் சொல்கிறார்கள். முன்னுரையில் மிகுந்த பெருந்தன்மையுடன் பேசினார்கள். இப்பொழுது சுரபேதம் ஏற்படுகிறது. தயவுசெய்து அப்படிப் பேசவேண்டாம். இலாயக்கு இல்லை என்று சொல்லவில்லை, ஆதாரம் காட்ட விரும்ப வில்லை என்று சொன்னேன், தவறான புள்ளி விவரங்கள் இருப்பதால் ஆதாரத்திற்கு எடுத்துக்கொள்ள வில்லை என்று
சொன்னேன்.
திரு. ஏ.ஆர். மாரிமுத்து: நான் வேகப்பட்டோ, கண்ணியத் திற்குக் கீழே இறங்கியோ பேச மாட்டேன். இதில் தவறு இருப்பதால் இதை ஆதாரம் காட்ட இயலாது என்று அவர்கள் சொல்லியிருக்கலாம், அம்மாதிரி சொன்னதாக வைத்துக்