பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

365

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: நீங்கள் மட்டும் சொல்லிக்கொண்டிருப்பீர்கள். நாங்கள் கமிட்டி போடக் கூடாதா?

திரு. ஏ.ஆர். மாரிமுத்து:

ஐ.என்.டி.யு.சி. போன்ற

அமைப்புகளின் சார்பில் அதை மாற்றவேண்டுமென்று பிரதமர் அவர்களைப் பார்த்துக் கேட்டிருக்கிறார்கள்.

விவசாயத் தொழிலாளர்கள் கூலியைச் சரியான முறையில் உயர்த்த வேண்டும், நிர்ணயிக்க வேண்டும்.

பீகாரில் வரதட்சிணை வாங்குவதை காக்னிசிபிள் அபென்சாக அறிவித்திருகிறார்கள். நாமும் செய்யலாம்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: அதைச் செய்யலாம்.

திரு. ஏ.ஆர். மாரிமுத்து: விவசாயிகள் உற்பத்தியைப் பெருக்க கடன் கொடுத்ததாகச் சொன்னார்கள். ஒத்துக்கொள் கிறோம். பூச்சி மருந்துக்குக் கொடுத்த சப்சிடியை நிறுத்தி விட்டார்களே. அதைக் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். நிர்வாகத்திலே பங்கு என்பதைப் பற்றி ஒன்று சொன்னார்கள். நிர்வாகத்திலே பங்கு என்பது ஒன்று; தொழிலிலே பங்கு என்பது வேறு என்று திரு.கே.டி.கே. அவர்கள்கூடச் சொன்னார்கள். உற்பத்தியைப் பெருக்கக்கூடிய விதத்திலே நிர்வாகத்திலே பங்கு இருக்க வேண்டும். தனியார் துறையிலேகூட என்ன கெபாசிடி இருக்கிறதோ அதிலே 40 சதவிகிதந்தான் தற்போது உற்பத்தியாகிறது.

ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றியெல்லாம் சொன்னார்கள். அதைப்பற்றியெல்லாம் நான் விரிவாகப் பேச வேண்டு மென்றால் நேரம் இல்லை.

ஆக, எல்லா வழிகளிலும் பார்க்கிறபோது நாம் இன்னும் செய்யவேண்டியவை மிக அதிகமாக இருக்கிறது. நாம் செய் திருப்பது குறைவு. மிக அதிகமாகச் செய்யவேண்டியவை இருக்கின்றன என்ற முறையிலே நீங்கள் வேகமாகப் போக வேண்டும். உங்களிடத்திலே எவ்வளவோ தவறுகள் இருக் கின்றன. அவற்றைத் திருத்திக்கொள்ள வேண்டும். அவசர நிலைப் பிரகடனம் நியாயமானது.