கலைஞரின் சட்டமன்ற உரைகள்
367
உரை : 71
நம்பிக்கை இல்லாத் தீர்மானம்
நாள் : 04.01.1978
கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்தத் தீர்மானத்தின்மீது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகப் பேசுவதற்கு அலுவல் ஆய்வுக் குழுவில் இரண்டரை மணி நேரம் ஒதுக்கப் பட்டிருக்கிறது. அதனையொட்டி என்னுடைய முன்மொழிதலை நான் இங்கே தொடங்குகின்றேன்
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்ததன் நோக்கம் அரசு இந்த ஆறு மாத காலத்திலே செய்துள்ள தவறுகளை எண்ணிப்பார்த்து திருத்திக்கொள்ள வேண்டும் என்பதாகும். இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் இந்த அவையிலே வாக்கெடுப்புக்கு விடப்பட்டு அது வெற்றிபெறும் என்ற நம்பிக்கையோடு நான் இந்தத் தீர்மானத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகக் கொண்டுவரவில்லை. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினுடைய நோக்கத்தை நான் ஓரளவு சுட்டிக்காட்டிவிட்டேன் என்றே நம்புகிறேன்.
இந்த அரசு ஆறு மாத காலத்திற்கு முன்பு தொடங்கிய போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நானும் கழகத்தினுடைய பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களும் அறிக்கை வாயிலாகவும் சென்னையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஆக்கபூர்வமாக ஒத்துழைப்பை புதிய அரசுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் தரத் தயங்காது என்பதை சுட்டிக்காட்டியிருந்தோம். அதற்கு எடுத்துக்