கலைஞரின் சட்டமன்ற உரைகள்
371
அவர்களோடு பேசுவதற்காக முயற்சித்தேன். ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் அங்கில்லை, இங்கிருக்கிறார்கள் என்று ஒரு தொலைபேசி எண் கொடுக்கப்பட்டது. அந்த தொலைபேசி எண்களோடும் தொடர்பு கொண்டேன். அவர்கள் பிறகு பேசுவதாகச் சொல்கிறார்கள் என்றுதான் பதில் வந்தது.
அதற்குப் பிறகு முதலமைச்சருடைய அலுவலகத்திற்கும் அவருடைய இல்லத்திற்கும் தொடர்பு கொண்டேன். அவரும் எனக்குக் கிடைக்கவில்லை. நான் இந்தப் பிரச்சினையில் அந்தத் தொழிலாளர்களுடைய பிரதிநிதிகள் தந்த கருத்தைப் போக்குவரத்துத் துறை அமைச்சருக்குத் தெரிவித்து சுமூக சூழ்நிலை ஏற்படுத்தவேண்டுமென்ற ஆக்கரீதியான பணிக்காக அவ்வளவு கஷ்டத்தை அன்றைக்கு நான் எடுத்துக்கொண்டேன்.
அதற்குப் பிறகு மாலை 4 மணி அளவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் “காலையில் ஐந்தாறு தடவை தொலைபேசி மூலமாகப் பேசினீர்களாமே, என்ன?” என்று கேட்டார். அதற்குப் பிறகு "நிலைமை இவ்வாறு இருக்கிறது; நீங்கள் இதை சுமூகமாகத் தீர்க்க அவர்கள் 50 ரூபாய் இடைக்கால நிவாரணம் தரவேண்டுமென்று நிற்பார்கள்போல் தெரிகிறது” என்று சொன்னேன்.
"
எப்போதும் ஒரு கோரிக்கையை கோரிக்கையை வைப்பவர்கள் கொஞ்சம் அதிகமான அளவில் கோரிக்கையை வைத்தால்தான் ஓரளவு கிடைக்கும் என்று அதிக அளவில் கோரிக்கை வைப்பார்கள். "இரு தரப்பிலும் கவுரவப் பிரச்சினையைப் பார்க்காமல் 30 ரூபாய் அளவுக்குத் தீர்த்துவிடலாம்; நீங்கள் கலந்து பேசுங்கள்; நானும் பேசட்டுமா" என்றதற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் “அதெல்லாம் முடியாது; அந்த அளவுக்கு இயலாது” அதை கொடுக்க இயலாது. 15 ரூபாய்க்கு மேல் தர இயலாது" என்று கூறிவிட்டார். ஆகவே, பேச்சை நிறுத்திவிட்டேன்.
அன்று மாலை கலைவாணர் நினைவு விழாவில் முதலமைச்சர் பேசுகிறார். அங்கு பேசும்போது "காலையில் ஒருவர் போன் செய்து எப்படியாவது 30 ரூபாய்க்கு ஒப்புக் கொள்ளுவார்கள் என்று கேட்கிறார்" என்று பேசுகிறார். கலை