பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

375

எதிர்க்கட்சி என்பது அரசாங்கத்திற்கு உடனடியான மாற்று என்பது மட்டுமல்ல. மக்களுடைய அதிருப்தியை ஒன்று சேர்ந்து தெரிவிக்கும் மையமாகும். மக்களுக்கு அரசாங்கத்தின் பணி எவ்வளவு முக்கியமானதோ, அதே போன்றுதான் எதிர்க் கட்சிகளின் பணிகளும். எதிர்க்கட்சி இல்லாவிட்டால் நாட்டில் ஜனநாயகம் இல்லை. மாட்சிமை தங்கிய எதிர்க்கட்சி - இங்கிலாந்து நாடு என்பதால் ஐவார் ஜென்னிங் அவர்கள் மாட்சிமை தங்கிய எதிர்க்கட்சி என்று குறிப்பிடுகிறார் - இந்த மாட்சிமை தங்கிய எதிர்க்கட்சி - எதிர்க்கட்சி என்று வெறும் அர்த்தமற்ற சொல்லும் அல்ல. மாட்சிமை தங்கிய அரசும் மக்களுக்குத் தேவை என்று ஐவார் ஜென்னிங்ஸ் தன்னுடைய நூலில் எடுத்துக்காட்டுகிறார்.

அந்த வகையில் அரசுக்கு மாற்றுக்கட்சி என்பதோடு, மக்களுடைய அதிருப்தியை அரசுக்குப் பிரதிபலிக்கிற பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு உண்டு என்கிற காரணத்தினால்தான் இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு அவ்வப்போது நடைபெறுகிற சட்டசபைக் கூட்டங்களில் ஒத்திவைப்புத் தீர்மானத்தின் மூலமும், விவாத விளக்கங்கள் மூலமாகவும், கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் மூலமாகவும், இவைகள் எல்லாம் எடுத்துக் கொள்ளப்படக்கூடிய சூழ்நிலை இல்லையென்றால், கண்டனத் தீர்மானம் மூலமாகவும் - அவ்விதம் கொண்டுவரப்பட்டால் அதில் ஒரு குறிப்பிட்ட, விஷயத்தைப்பற்றி மட்டும்தான் பேச முடியும் என்ற நிலை வரும் என்கின்ற காரணத்தால், நம்பிக்கை யில்லாத் தீர்மானம் என்று கொண்டுவந்தால், அதன் அடிப்படையில் அதைப் பயன்படுத்திக்கொண்டு, விஷயங்களையும் பேசலாம் என்கின்ற அடிப்படையில் எதிர்க் கட்சிகள் தங்களுடைய கடமையைச் செய்து வருகின்றன.

பல

அந்த வகையில் இங்கு கண்டனத் தீர்மானம் ஒன்று கொடுக்கலாம் என்று முடிவு செய்தால், அதன்மீது குறிப்பிட்ட ஒரு பிரச்சினையைப்பற்றி மட்டும்தான் பேச இயலும் என்பதால், அதை மாற்றி இந்தத் தலைப்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்று கொடுத்தால் கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிந்த பிறகு நடைபெற்ற பல்வேறு நாட்டு நிகழ்ச்சிகளையும் இந்த தீர்மானத்தின் மீது பேசுவதற்கு வாய்ப்பாக இருக்கும்.