பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

நாங்கள் பேசுவதைத் தொடர்ந்து மற்ற தோழமை, எதிர்க் கட்சிகளும் பல பிரச்சினைகளை பேசுவதற்கு வாய்ப்பைக் கொடுக்கும் என்ற அளவில் எதிர்க்கட்சிகளும் இதற்காக மகிழ்ச்சி அடையலாம். தோழமை அல்லாத - தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சியை ஆதரித்த எதிர்க்கட்சிகளும் பல பிரச்சினைகளை இதில் பேசலாம். இந்தத் தீர்மானம் கொண்டுவந்த நேரத்தில், வழி மொழியவில்லை என்றாலும், இதைப் பயன்படுத்திக்கொண்டு பல்வேறு நாட்டுப் பிரச்சினைகளை எடுத்துச்சொல்வதற்கு பயன்படும் என்கின்ற காரணத்தினாலும் இது கொண்டு வரப்பட்டிருக்கிறது.

பல்லவன் போக்குவரத்து கிளர்ச்சிக்குப் பிறகு மதுரை மாணவர்கள் கிளர்ச்சி ஒன்று நடைபெற்றது. அதையும் தூக்கி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலையில் போட்டார்கள்.

மதுரையிலே மாணவர்கள் கிளர்ச்சி நடைபெறுவதற்கு முதல் நாள் இந்திரா காந்தி அம்மையார் கைது செய்யப் பட்டார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட காரணத்தால் அங்குள்ள காங்கிரஸ்காரர்கள் கொதிப்படைந்து மதுரை போன்ற பல்வேறு இடங்களில் கதவடைப்பில் ஈடுபட்டபோது கதவடைக்க மறுத்த ஜனதாக் கட்சியைச் சேர்ந்த பலபேர்கள் கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள், கைகால்கள் ஒடிக்கப் பட்டிருக்கின்றன. மண்டைகள் பிளக்கப்பட்டிருக்கின்றன. சிலர் மருத்துவ மனைகளிலே சேர்க்கப்பட்டார்கள். சிலர் மதுரை மருத்துவமனையிலே சேர்க்கப்பட்டார்கள்.

அந்த நேரத்திலே நான் திருநெல்வேலி மாவட்டத்திலே சுற்றுப்பயணம் செய்வதற்கு சென்னையிலிருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸில் புறப்பட்டுச் செல்கிறேன். அப்படி புறப்பட்டுச் சென்ற ரயில் செங்கற்பட்டு ரயிலடியில் 6 மணி நேரம் தாமதமாகி விட்டது. அதற்குக் காரணம் செங்கற்பட்டிற்கு அடுத்தாற்போல் மாணவர்கள், தாங்கள் விரும்புகிற இடத்தில் ரயில் நிற்க வேண்டும் என்று பல நாட்கள் எடுத்துவைத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாத காரணத்தாலே அந்த வழியில் முன்னால் சென்ற ரெயில்களை மறித்துவிட்ட காரணத்தால், நாங்கள் சென்ற ரயில் செங்கற்பட்டிலே 6 மணிநேரம் தாமதமாகிவிட்டது. தாமதம்