பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

377

ஆகாமல் இருந்தால் நான் குறிப்பிட்ட நேரத்திலே திருநெல்வேலி போய்ச் சேர்ந்து இருக்கலாம். தாமதம் ஆன காரணத்தாலே செங்கற்பட்டு ரயில் நிலையத்திலிருந்து மதுரை வரை சென்று மதுரையிலே இறங்கி பிறகு அங்கிருந்து கார் மூலம் நெல்லைக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்து செங்கற்பட்டி லிருந்து போன் மூலம் மதுரைக்கு தெரிவிக்கப்பட்டது.

மதுரையில் காலையில் 6 மணிக்குப் போய் இறங்கியது. பிறகு முதல் நாள் மதுரையிலே கிளர்ச்சியிலே அடிபட்ட மாணவர்கள், அடிக்கப்பட்டதால் ஓரளவிற்குக் காயப் பட்டவர்கள், அதிக காயமுற்று மருத்துவமனையிலே சேர்க்கப் பட்டவர்களை மருத்துவமனையிலே வந்து பார்க்கவேண்டு மென்ற கோரிக்கையை என்னிடத்திலே விடுத்தார்கள். நாங்கள் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று அங்கு அடிப்பட்டுக் கிடக்கின்ற, காயம்பட்டுக் கிடக்கின்ற மாணவர்களையும் அதற்கு முதல் நாள் சம்பவத்தில் காயமுற்றிருந்த ஜனதா கட்சியைச் சேர்ந்த நண்பர்களையும் பார்த்துவிட்டு என்னை நிருபர்கள் சந்தித்த நேரத்திலே, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் பதிலளித்த போது சொன்னேன். இங்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே போலீசார்போல் செயல்படத் துவங்கியிருக் கிறார்கள். அவர்கள் சட்டத்தைக் கையிலே எடுத்துக்கொண்டு மாணவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். போலீசார் ஒன்றும் செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள். இந்தச் சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமென்று சொன்னேன்.

மாணவர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள் என்று சொன்னார்கள். ஆனால் என்.சி.சி. ரைபிளாஸ் சுட முடியாது என்றும் சொல்கிறார்கள் என்றும் குறிப்பிட்டேன்.

அதற்கு மறுநாள் மாவட்ட ஆட்சித் தலைவரும், காவல் துறை அதிகாரிகளும் சேர்ந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிடு கிறார்கள். மாணவர்களை வெளி ஆட்கள் தாக்குவதை போலீசார் அனுமதித்ததாகவும், அ.தி.மு.க. ஆதரவாளர்களும் அ.தி.மு.க. பேட்ஜ் அணிந்தவர்களும் இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்ட தாகவும் கூறப்படுவது சரியல்ல. எனவே இதுபோல தவறான அறிக்கைகளை வெளியிட்டு பொது அமைதியையும் சட்டம் ஒழுங்கையும் குலைப்பது சரியல்ல என்று மாவட்ட ஆட்சித் தலைவரும் போலீஸ் அதிகாரியும் அறிக்கை விட்டிருக்