கலைஞரின் சட்டமன்ற உரைகள்
37
வேகமாகவும் விறுவிறுப்பாகவும் செயல்படுகிறது. அது எப்படி என்பதை விளக்குகிறேன்.
நான் சுப்ரீம் கோர்ட்டிலே ஒரு மனு செய்திருந்தேன் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட விஷயத்தை அதாவது எனக்குப் பாதகமாக முடிந்துவிட்ட விஷயத்தை உடனடியாக செய்தித்துறை இயக்குநர் அவர்கள் எல்லா பத்திரிகைக் காரர்களையும் அழைத்து, அதிலும் அலை ஓசை போன்ற பத்திரிகைகளைத்தவிர மற்ற பத்திரிகைக்காரர்களை அழைத்து கருணாநிதி போட்ட கேஸ் தள்ளுபடி செய்யப்பட்டது என்ற செய்தியை மிக விரைவாக வெளியிட ஏற்பாடு செய்தார்கள். அதாவது திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் எமர்ஜென்சி காலத்திலே எப்படி செய்திகளை விரைவாகவும், விறுவிறுப்பாகவும் தந்துகொண்டிருந்தார்களோ அதுபோன்று இந்த அரசின் செய்தித்துறை செயல்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட செய்தித்துறை அன்றையதினம் எல்லா நிருபர்களையும் அழைத்து மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவரவர்கள் இதைத்தான் சொன்னார்கள். எனவே நீங்கள் இவற்றை வெளியிடக்கூடாது என்று குறிப்பிட்டிருக்கலாம். அல்லது மாண்புமிகு பேரவைத் துணைத் துணைத் தலைவரவர்களாவது தன்னுடைய அறையிலே எல்லாப் பத்திரிகை நிருபர்களையும் அழைத்து நான் இப்படித்தான் சொன்னேன். அது உங்களுடைய காதுகளிலே விழாமல் போயிருக்கக் கூடும், ஆகவே என்னுடைய ஆணை இதுதான், எனவே இதனைப் பிரசுரிக்காதீர்கள் என்று சொல்லி இருக்கலாம். அது மாத்திரமல்ல, இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். அன்றையதினம் எழுப்பப்பட்ட முழக்கங்களுக்கு மேலாகவே மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சரைப்பற்றி, என்று திருச்சியில்
தொழிலாளர்கள் குறிப்பிட்டதாக இந்த அவையிலே மாண்புமிகு அவை முன்னவர்கள் எடுத்துச்சொன்னார்கள், அவ்வாறு அவர்கள் எடுத்துச்சொன்னது நேற்றைய தினம் பத்திரிகைகளிலே வெளி வந்திருக்கிறது. அது உரிமைப் பிரச்சினையாகாதா? பிரச்சினையாக உரிமைப் அதனையே ஆகவே எடுத்துக்கொள்ளாத நிலையில், நிலையில், மாண்புமிகு மாண்புமிகு பேரவைத் துணைத்தலைவரவர்கள் சொன்னது யாருடைய காதிலேயும் சரியாக விழாத காரணத்தால் இவ்வாறு பிரசுரிக்கப் பட்டிருப்பது உரிமைப்பிரச்சினை என்று சொல்வது சரியல்ல என்பதுதான் என்னுடைய கருத்து.
- மாண்புமிகு பேரவைத் தலைவரின் ஆணைக்கிணங்க அகற்றப்பெற்றது.