பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

379

தாக்கப்பட்டிருக்கிற இந்த நிகழ்ச்சிக்கு, அதிகாரிகளும், அமைச்சர்களும் மாறி, மாறி முரண்பட்டதான கருத்துக்களை வெளியிடுவதன் காரணமாக உடனடியாக விசாரணை தேவை என்று எடுத்துக்காட்டினேன்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நான் விடுத்த வேண்டுகோள் ஏற்கப்படவில்லை, மற்றக் கட்சிக்காரர்கள் விடுத்த வேண்டு கோளும் ஏற்கப்படவில்லை. அதே நேரத்திலே 9 ஆம் தேதி, மறுநாள் நிதியமைச்சரவர்கள் திருச்சியிலே சொல்லியிருக் கிறார்கள். அது தினமணி பத்திரிகையிலே வந்திருக்கிறது. கல்லூரிக்குள் தனியார் சென்றது உண்மைதான் என்று சொல்கிறார்கள். இதுவும் அதிகாரிகள் மறுத்துவருகின்ற விளக்கம்தான். கல்லூரிக்குள் தனியார் சென்றது உண்மைதான். ஆனால் அவர்கள் அ.தி.மு.க.வினர் அல்ல, சர்க்காரின் பெயரை கெடுப்பதற்காக தி.மு.க.வினர்தான் உள்ளேசென்று தாக்கினார்கள் என்று சொல்கிறார்.

இயல்பாகவே நிதியமைச்சர் அவர்கள் இப்படி கேலியாக பேசுவதை வாடிக்கையாகக் கொண்டவர் என்ற காரணத்தால் உள்ளே சென்றது உண்மைதான், ஆனால் உள்ளே சென்றவர்கள் அ.தி.மு.க.வினர் அல்ல, தி.மு.க.வினர்தான் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆக, திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மாணவர்களைத் தாக்கினார்கள் என்ற நிதியமைச்சரின் குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமானால், திராவிட முன்னேற்றக் கழகம்தான் மாணவர் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டது என்ற அந்தக் குற்றச்சாட்டு எப்படி உண்மையாக இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். ஆகவே, இப்படிப்பட்ட முரண்பட்ட வாதங்களை வைப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு பயன்படுமே அல்லாமல் உண்மையை அறியப் பயன்படாது, எனவேதான் அதற்கொரு நீதி விசாரணை தேவை என்று எதிர்க் கட்சியின் சார்பிலே கூறப்பட்டது. அந்த நீதி விசாரணைக்கு இணங்காத காரணத்தால், இந்த மிகப்பெரிய பிரச்சினையில் இந்த அரசு நீதி விசாரணை வைக்காத ஒரு பெரும் தவறை இழைத்து விட்டது என்ற குற்றச்சாட்டை நான் அரசின்மீது சாட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.