கலைஞரின் சட்டமன்ற உரைகள்
383
எனவே, இந்த 6 மாத காலத்தில் கிட்டத்தட்ட 25,000, 30,000 பேர்கள் அரசியல் கட்சிக்காரர்களிலிருந்து தொழிலாளர் களிலிருந்து, மாணவர்களிலிருந்து, மருத்துவக்கல்லூரி மாணவர்களிலிருந்து, அவுஸ் சர்ஜன்களிலிருந்து, கல்லூரிப் பேராசிரியர்கள் வரையில் கைது செய்யப்பட்டு அவர்களிலே கர்ப்பிணி பெண்கள், மதுரையிலே இருந்து வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, லாரியிலே அழைத்துசெல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை எதிர்க்கட்சி என்ற முறையில் நாங்கள் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக் கிறோம். அப்படி சுட்டிக்காட்டவில்லை என்றால், எங்கள் கடமையிலிருந்து தவறியவர்களாவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவைகள் மாத்திரம் அல்ல. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளைப் பற்றியும் நாம் இங்கே சிந்தித்தாக வேண்டும்
பொதுவாக, புதிய அரசு தங்களுடைய தேர்தல் பிரகடனத்தில் ருசியான, சுவையான, கவர்ச்சிகரமான, ஈர்க்கத்தக்க, இன்பமான, எழில் வாய்ந்த திட்டங்களை அறிவித்தது. அந்தத் திட்டங்களில் எத்தனையோ, கவர்னர் அவர்களுடைய உரையில் இடம் பெறவில்லை என்ற குறைபாட்டை இந்த அவையில் நடந்த விவாதத்தில் நாங்கள் எடுத்து வைத்தோம். பிறகு கவர்னர் உரையிலே கொஞ்சம் நஞ்சம் இடம்பெற்ற திட்டங்கள் நிதி அமைச்சர் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் இடம் பெறவில்லை என்று எடுத்துக் காட்டினோம்.
குறிப்பாகவும், சிறப்பாகவும் சொல்ல வேண்டுமானால் 16 ஆயிரம் நியாயவிலைக் கடைகள், ஒவ்வொரு ரெவின்யூ கிராமத்திலும் ஒரு கடை திறக்கப்படும் என்று கவர்னர் உரையிலே எடுத்துச் சொல்லப்பட்டபோது, இந்த மண்டபமே அதிரும் வண்ணம், ஆளுங்கட்சித் தரப்பிலும் தோழமைக் கட்சித் தரப்பிலே இருந்தும், ஏன் எதிர்க்கட்சித் தரப்பிலும் இருந்தும் கையொலி எழும்பியது. 16 ஆயிரம் நியாயவிலைக் கடைகளை, ஒவ்வொரு ரெவின்யூ கிராமத்தில் வைக்கப்படும் என்று சொல்லப்பட்டது.