390
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
நேரத்தில் அரிசி விலை விற்றதோ, அதேதான் 77 ரூபாய் விற்கின்ற நேரத்திலும் அரிசி விலை விற்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. நாம் நெல்விலையை குறைத்திருப்பதை அதிகப் படுத்தி, அதே நேரத்தில் அரிசி விலை ஏறுவதைத் தடுக்க நியாய விலைக் கடைகளை திறக்க வேண்டும். மீண்டும் சுற்றிச்சுற்றி வந்தால், இந்த 16,000 நியாய விலைக் கடைகள் பக்கம்தான் நாம் வரவேண்டியிருக்கிறது. ஒரு இனிப்பான அறிவிப்பை அறிவித்துவிட்டு, அதை மீண்டும் மூடி வைத்துவிட்டு, 442 கடைகள்தான் இப்போது திறக்கப்படும் என்று சொன்னால் அது பயனுள்ள காரியமாக இருக்காது என்று சொல்ல விரும்புகிறேன்.
பொதுவாக அரசு சார்பாக எடுத்துச் சொல்லப்படுகின்ற எந்த வாக்குறுதிக்கும், பிறகு நடைமுறைக்கும் தொடர்பு இருப்பதில்லை என்பது என்னுடைய குற்றச்சாட்டு. அதற்கு ஒரு உதாரணம் சொல்லவேண்டுமென்றால், இஸ்மாயில் கமிஷன் தன்னுடைய விசாரணையின் தொடர்பாக சென்னை மத்திய சிறைச்சாலைச் சென்றபோது, அங்குள்ள கைதிகள் சில தகவல்களை அந்தக் கமிஷனுக்கு தந்தார்கள் என்பதற்காக, அந்தக் கைதிகள் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகப் பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது. அதை விசாரிக்க யாராவது அமைச்சர்களை அங்கேயனுப்பி ஆராயச் செய்வார்களா என்று கேட்டபோது, முதலமைச்சர் சொன்னார், அமைச்சர்களை அனுப்புவது நல்லதல்ல; ஒரு நீதிபதியை நான் சிறைச்சாலைக்கு அனுப்பி விசாரித்து வரச்சொல்கிறேன் என்று சொன்னார். நீதி பதியை அனுப்பவில்லை. நாங்கள்தான் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டோம். சொல்லி கிட்டத்தட்ட 3, 4 மாதங்கள் ஆகின்றன. 3, 4 மாதங்களில் எந்த நீதிபதி அங்கே சென்றார்? அந்த வாக்குறுதி என்னவாயிற்று? அவர் சென்று, அவர் விசாரித்தது என்ன? இப்படி சட்டமன்றத்தில் சொல்லப்படுகின்ற வாக்குறுதி கவனிப்பாரற்ற நிலையில், சட்டமன்றத்தில்தானே கேட்டான். அங்கு வாக்குறுதி அளித்தால் அலட்சியப் படுத்திவிடலாம் என்று புறக்கணிக்கப்படுகின்ற நிலையில்