பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

அவர்களுக்கு இயற்கை உபாதை ஏற்பட்டு கழிவிடம் செல்ல மாட்டடார்களா? சிறு நீர் கழிக்கச் செல்ல மாட்டார்களா? அதைப் போல, முன்னாள் சபாநாயகர் மற்றும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் சிறுநீர் கழிக்கின்ற இடத்திற்குச் செல்வதைப் போல வெளியே வந்து அந்தச் செக்கை வாங்கிக்கொண்டு போவதற்கு எவ்வளவு நேரமாகிவிடும்? அந்தக் கழிவிடத்தை விட அவ்வளவு கேவலமானவரா புலவர் கோவிந்தன்? சிந்தித்துப் பாருங்கள். இது சமாதானமா? சீப் செக்ரடரி கொடுத்தது சமாதானமா? வெளியே வந்து அந்தச் செக்கை வாங்கிக்கொண்டு உள்ளே போவதற்கு எவ்வளவு நேரமாகி விடும்; இதற்காக, ஏன் வேண்டுமென்றே ஒரு மழுப்பலான சமாதானம்? நான் வாங்கிக் கொண்டேன் என்றா மறுக்கிறார்? நான் சந்திக்கவில்லை என்று கூறுவது தவறு என்றா மறுக்கிறார்? அதற்கு விளக்கம் சொல்லவில்லை. தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும்.

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறைச் சாலைக்கு மணியார்டர் அனுப்புங்கள் என்று கேட்டுக் கொண்டேன் என்றால், எனக்குத் தெரியும், ஏற்கனவே சிறைச் சாலை விதி இருக்கிறது. 50 ரூபாய்க்கு மேல் சிறைச்சாலையில் இருக்கிறவர்கள் கைப்பணத்தை வைத்துக்கொள்ளக்கூடா தென்று விதி இருக்கிறது. ஆனால் நான் கேட்டது வைத்துக் கொள்வதற்கான பணம் அல்லவே. அது, உடனே புயல் நிவாரண நிதிக்கு திருப்பி அனுப்ப, ரீ-டைரக்ட் செய்வதற்காகச் செய்த ஏற்பாடுதான் அந்த ஏற்பாடு. அதிகாரிகளுக்கு அது தெரிந்திருந்தும்கூட அவ்வளவு அவசரம் அவசரமாக தலைமைச் செயலகத்திலிருந்து ஒரு தாக்கீது செல்வானேன்?

ஆனால், மணி ஆர்டர் வந்தால் அதை அனுமதிக் காதீர்கள் என்ற தாக்கீது ஏன்? சிறையில் அடைக்கப்பட்ட எங்களுக்கு கழகத் தலைவர்களுக்கு அவர்களுடைய துணைவியார் சோறு கொண்டு வந்து பரிமாறலாம் என்ற அளவிற்கு சட்டத்தினைத் திருத்த முடியுமா என்று நான் சிறை சூப்பெரின்டெண்டு அவர்களோடு பேசிவிட்டுத்தான் வந்திருக்கிறேன் என்று "இந்து" பத்திரிகை விழாவில் பேசிய