பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

39

துணைத் தலைவர்களோடும் மாண்புமிகு மின்வாரியத்துறை அமைச்சர் அவர்களோடும் முன்னவர் முன்னவர் அவர்களோடும் கலந்துபேசியதாகவும் இன்றும் கேள்வி நேரத்தில் நான் முன்கூட்டியே வந்துவிட்டால் அவை முன்னவர் அவர்களோடு பேச ஒரு வாய்ப்பு ஏற்படும். முடிவு எடுக்க தோதாக இருக்கும் என்றும் அறிவித்தீர்கள். நான் நீங்களும் இருக்க வேண்டுமே என்று தங்களை கேட்டுக்கொண்டேன். தாங்கள் சொன்னீர்கள், துணை சபாநாயகர் இன்று வர நேரமாகும். நான்தான் கேள்வி நேரத்தை நடத்த வேண்டியவனாக இருக்கிறேன். எனவே நீங்கள் கேள்வி நேரம் நடக்கிறபோதே வந்து விடுங்கள், அவை முன்னவர் அவர்களோடு அவரது அறையிலோ சபாநாயகர் அவர்களுடைய அறையிலோ நீங்கள் பேசலாம். எப்படி இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வரலாம். இந்த மன்றத்தினுடைய மரபுகளை எப்படிச் செம்மைப்படுத்தலாம். எப்படி வழி வகுக்கலாம் என்பதை அறிவித்தீர்கள்.

அதை எதிர்பார்த்து இங்குக் கேள்வி நேரம் 10 மணி வரை நடைபெறும். அதற்குள் போய்விடலாம் என்று நினைத்து 9.35 மணிக்குப் புறப்பட்டு, 9.40 க்கெல்லாம் இங்கு வந்து சேர்ந்தேன். இங்கு வந்தால் திடீரென்று கேள்வி நேரம் 10 மணி வரை நடைபெறுவதற்குப் பதிலாகக் கால் மணி நேரம் முன் பாகவே முடிந்துவிட்டதால், அவை முன்னவர் அவர்களோடு கலந்து பேசுவத்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது இப்போது இந்தத் தீர்மானம் இங்கு முன்மொழியப்பட்டு, எதிர்க்கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பேராசிரியர் அவர்கள் இவர்கள் எல்லாம் தங்களுடைய கருத்துக்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தியாவில் பல மாநில சட்டமன்றங்களிலும், பாராளு மன்றத்திலும் மாநிலங்கள் அவையிலும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகள் எல்லாம் வழிகாட்டிகளாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று கருதுபவனும் அல்ல விரும்புபவனும் அல்ல, தூண்டிவிடக் கூடியவனும் அல்ல என்பதை மாண்புமிகு முன்னவர் அவர் களும், தாங்களும் என்பால் நம்பிக்கைக் கொண்டவர்களும் நிச்சயமாக உணருவார்கள் என்று நம்புகிறேன். அண்மையில் கூட மாநிலங்கள் அவையில் இந்திரா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கல்பனாத்ராய் அவர்கள் மாண்புமிகு உறுப்பினர்