பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

உரை : 72

நம்பிக்கை இல்லாத் தீர்மானம்

நாள் : 07.01.1978

கலைஞர் மு. கருணாநிதி: பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நான் கொண்டுவந்த நம்பிக்கையின்மை தீர்மானத்தையொட்டி இறுதி நாளாக விவாதம் நடைபெற்று முடிவுறுகிற இந்தக் கட்டத்தில் மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களுடைய பதிலுக்குப் பிறகு என்னுடைய, உரையைத் தொடங்குகின்றேன்.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஒரு மாமன்றத்தில் கொண்டுவருவது என்பது அதிசயமான ஒன்றல்ல என்பதையும் மாமன்ற விதிமுறைகளால் தரப்பட்டுள்ள உரிமையைப் பயன் படுத்திக் கொண்டு எதிர்க்கட்சிகள் தங்களுடைய கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஒரு வாய்ப்பாக அதனை ஏற்றுக்கொள்கிறது என்பதையும் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தபோதே நான் விளக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

இந்த மன்றத்தில் எத்தனையோ அமைச்சரவைகள் மாறி மாறி இருந்திருக்கின்றன என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். அந்த அமைச்சரவைகள் மீதெல்லாம் முறையோடு கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் அவையில் எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டு முடிவுற்றிருக்கின்றன என்பதும் இந்த அவையினுடைய வரலாற்றுப் புத்தகம் நமக்கு எடுத்துக்காட்டுகிற ஒரு செய்தியாகும். முறையற்ற தன்மையிலே வருகின்ற எந்த ஒரு தீர்மானமானாலும் அதை அவை நிராகரிக்கும் என்பதை நாம் அறியாதவர்கள் அல்ல.

எனவே, முறையோடு கொண்டுவரப்பட்டிருக்கிறதா என்பதை பேரவைத் தலைவர் அவர்கள் ஆராய்ந்து பார்த்த பிறகு அதை முன் மொழிய எத்தனை பேர்கள் எழுந்து நிற்க வேண்டும்