40
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
ய
ரகுமான்கான் எதைத் தூக்கிக் காண்பித்தார் என்று கண்டிக்கப் படுகிறாரோ அதே கருவியைத் தூக்கிக் கல்பனாத்ராய் காண்பித்தார் என்று செய்தி வந்திருக்கிறது. அதற்காக யாரும் மன்னிப்பு கேட்டுக் கொண்டதாகவோ, இதற்காக ராஜ்ய சபாவில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் எனக்கு கிடைத்த தகவல். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டது போல் காரணங்கள் எதுவாக இருந்தாலும், தாங்கள் கண்டிப்பதற்கோ கொஞ்சம், வேகமாக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கோ, உரிய காரணங்கள் இருந் தாலும், நடைபெற்ற செயல்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை என்று நான் சொல்லமாட்டேன். நான் அன்றையதினம் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தேன். எனக்கு இது தொலைபேசி மூலமாகத் தெரிவிக்கப்பட்டதும், பேராசிரியர் அவர்களோடு தொடர்பு கொண்டபோது, என்னிடத்தில் இதற் காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டதாகக் குறிப்பிட்டார்கள். வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்கள் என்பதற்கு பின்னால் இந்தப் பிரச்சனை வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. எதிர்பார்க்கவே இல்லை. சம்பந்தப்பட்ட உறுப்பினர்களை அழைத்து அவர்களிடத்தில் என்னுடைய கண்டனங்களைத் தெரிவித்தேன். அப்படி நடக்கக்கூடாது என்றும் சொன்னேன்.
அ
ஆனால் ஆளும்கட்சி தரப்பிலிருந்து என்ன சொன் னார்கள் என்பதை அவை முன்னவர் அவர்கள் சொல்ல வில்லை. பத்திரிகைகள் எதிலும் ஆளும் கட்சியினரைப் பற்றி எதுவும் வரவில்லை என்று குறிப்பிட்டார்கள். ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் வந்திருக்கிறது.
"A.D.M.K member was heard remarking that it was not worse than the lifting of the dhoti by a ruling party member.”
என்று பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது. இந்தச் செய்தி இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையிலும் வடக்கே வெளியிடப்பட்டிருப்பதாக அறிகிறேன். ஆளும் கட்சி சார்பில் ஆத்திரமான சொற்கள் பேசப்பட்டன. ஆளும் கட்சியிலிருப்ப வர்கள் அன்றைக்கும் அந்த அளவுக்கு மரியாதை குறைவான முறைகேடான சூழ்நிலையை உருவாக்கினார்கள். அதற்காக