கலைஞரின் சட்டமன்ற உரைகள்
411
எத்தனையோ லாரிகளும், பேருந்து வண்டிகளும் என்னுடைய இனிய நண்பர், இன்றைய முதலமைச்சர் படத்தை ஒட்டிக் கொண்டால்தான் தெருவிலே போகலாம், சாலைகளிலே ஓடலாம் என்ற அளவுக்கு வழிமறித்துத் தாக்கப்பட்டன. அன்று அமைச்சராக இருந்த மன்னை நாராயணசாமி இராமநாதபுரம் கூட்டங்களுக்குச் சென்றபோது எப்படி தாக்கப்பட்டு காயமுற்றார்கள்? நாங்கள் சென்ற இடங்களில் எந்த அளவுக்கு அமளிகள் நடைபெற்றன என்பதையெல்லாம், கடந்த காலத்தைப் பற்றிப் பேசுகிற நேரத்தில் அவைகளையும் இணைத்துப் பார்க்கவேண்டுமென்று கடந்த காலத்தைப் பற்றிப் பேசியவர்களுக்கு மெத்தப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
பேரணி நடத்தப்பட்டது - திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை எதிர்த்து. ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் வீட்டுக்கும் ஊர்வலங்கள் எடுக்கப்பட்டன. “இந்த அரசு லஞ்ச லாவண்ய அரசு, நீ இந்த அரசில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தால், திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினராக இருந்தால் நீயும் இந்த லஞ்ச லாவண்யத்திற்கு ஒப்புதல் தருகிறாய் என்று பொருள். எனவே நீ அந்தக் கட்சியிலிருந்து விலகி விடு' என்ற அளவுக்கு எம்.எல்.ஏ.க்கள் வீடுகளுக்கு மனுக்கள் தருகிற வகையில் எல்லா எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளிலும் 170 எம்.எல்.ஏ.க்களுடைய வீடுகளுக்கும் அன்றைய தினம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நண்பர்கள் ஊர்வலம் எடுத்தார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பேரணி எடுத்து இங்குள்ள கவர்னரிடத்தில் புகார் மனு தரப்பட்டது. அந்தப் புகார் மனு வரலாறு என்னவென்றால் திராவிட முன்னேற்றக் கழகத்திலே கழகப் பொருளாளர் வெளியேற்றப்பட்ட பிறகு, அவருடைய ஸ்டூடியோவில் பல கூட்டங்களில் பேசிய நேரத்தில் பேசியதாகப் பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. அப்போது கழகப் பொதுக்குழு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர் பேசியதாக சுதேசமித்திரன் பத்திரிக்கையில் வந்த செய்தி என்னை வெளியேற்றிய இந்த