கலைஞரின் சட்டமன்ற உரைகள்
415
குறிப்பிட்டார்கள். கழக அரசு தொழிலாளர் நல விரோத அரசாக இருந்திருக்குமேயானால் கோவையிலே மூடப்பட்ட ஆலைகளை கதவுகளுக்கு வெளியே நின்று கதறிக் கொண்டிருந்த ஆலைத் தொழிலாளர்களின் நிவாரணத்திற்கான இந்தியாவிலேயே எந்த மாநிலமும் தராத அளவிற்கு 5 லட்சம் ரூபாயை நிவாரணமாகக் கொடுப்பதற்குக் காரணமாக இருந்தது கழக அரசுதான் என்பதை மறந்துவிடக் கூடாது.
அதைப் போலவே நெருக்கடிநிலை என்ற பெயரால் போனஸ் தரஇயலாது என்று அந்தத் தொழிற்சங்கங்களை
தொழிலாளர்களுக்கு சொல்லப்பட்டபோது
நடத்துகிறவர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆக இருந்தாலும்கூட, அவர்கள் எங்களிடத்திலே எடுத்துச் சொல்லி, போனஸ் என்ற பெயரால் கொடுக்காவிட்டாலும் எப்படியோ தொழிலாளர்களுக்கு அந்தப் பணம் வந்து சேர வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, அதற்குப் பிறகு நானும் அப்போது தொழிலாளர் நல அமைச்சராக இருந்தவரும் கோவைக்குச் சென்று ஆலை முதலாளிகளையும் தொழிற்சங்க நண்பர் களையும் அழைத்து - அப்போது திரு. ரமணியும் இருந்தார் என்று நினைவு - உட்கார வைத்துப் பேசி போனஸ் கொடுக்கா விட்டாலும் தொழிலாளர்களுக்கு ஒரு முன்பணம் கொடுங்கள் என்று முன்பணம் கொடுக்கச் சொல்லி சட்டத்தில் சந்து பொந்துகளைக் கண்டுபிடித்து அந்தத் தொழிலாளர்களுக்கு நன்மையை செய்யலாம் என்று நன்மை செய்து ஆலை அதிபர்களிடமிருந்து முன் பணத்தை வாங்கித் தந்த அரசாக தி.மு.க. அரசு இருந்தது என்பதை நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
மாணவர்களுடைய பிரச்சினைகளைப் பற்றி நாங்கள் பேசிய காரணத்தினால் அடிக்கடி இந்த அவையிலே உச்சரிக்கப் படுகின்ற உதயகுமாரினுடைய பெயரும், பாளையங்கோட்டை சம்பவமும், திருச்சி கிளைவ் ஹாஸ்டல் சம்பவமும் பல உறுப்பினர்களால் மீண்டும் மீண்டும் விளக்கப்பட்டன. நான் இந்த அவையிலே கடந்த கூட்டத்தொடரில் மிக விளக்கமாக,